30.04.2025 – சென்னை
அவர் இன்று தனது சமூக ஊடக தளத்தில் கூறுகையில்,
அன்பு நிறைந்த உள்ளங்களுக்கு வணக்கம்!
என் உயிர் அண்ணன், செந்தமிழன் சீமான் அவர்களின் நல் வாழ்த்துக்களோடு, “சோழன் சொல்வீச்சு” எனும், ‘வலையொளித் தளத்தை’ உழைப்பாளர்களின் உன்னத நாளான மே1 முதல் நாளன்று உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்!
தாய்த் தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் தேசிய அரசியலையும் உலகெங்கும் பரப்பும் இப்பணியில், தாய் தமிழகத்திலும் தமிழீழத்திலும் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல, எல்லைகள் கடந்து வாழும் என் அன்புத் தமிழ் சொந்தங்கள், “சோழன் சொல்வீச்சு” எனும் இந்த ஒளிக்கதிர் அலைவரிசைக்கு உங்கள் பேராதரவை மனமுவந்து நல்குமாறு பணிவன்போடு வேண்டுகிறேன்.
உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் இந்த முயற்சிக்கு உரமூட்டும்!
பேரன்புடன்
சோழன் மு.களஞ்சியம்.
– இவ்வாறு அவர் கூறினார்.