07.05.2025 – வட கிழக்கு
தமிழ் கட்சிகளின் அமோக வெற்றியினால் “சவப்பெட்டிக்குள் அடக்கம் செய்யப்பட்ட சிங்கள பேரினவாத ஜே.வி.பி.
தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தல் முடிவுகள், TNPF-இன் மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையையும், தமிழ் அரசியல் பரப்பளவில் அவர்களின் நிலைப்பாட்டின் வலிமையையும் வெளிக்கொணர்கின்றன. தேசியவாத அடையாள அரசியலைத் தாங்கி வரும் இந்தக் கட்சி, இளைஞர்கள் மற்றும் தேசிய விடுதலைக்காக குரல் கொடுக்கும் மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் ஓர் அரசியல் மாற்றத்துக்கு துணிவாக வாக்களித்திருக்கின்றனர் இனவாத அரசியலை முறியடித்து “தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை” என்கின்ற அடிப்படை உரிமைக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.