நெதர்லாந்தில் நடைபெற்ற கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வீரவேங்கைகளின் நினைவுசுமந்த உதைபந்தாட்டப் போட்டி.

நெதர்லாந்தில் தளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டம் மிக சிறப்புடன் ஆரம்பமாகி நடைபெற்றது.
மனித உரிமைகள் ஆணையகத்தின் 61 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்திர தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 12 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமான மனிதநேய ஈருருளிப் பயணமானது யேர்மனி – பிரான்சு எல்லையில் ஈருருளிப்பயணம் சந்தித்து பிரான்சுக்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது.


இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை (21-02-2026) காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் வியாழக்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மீனவர்களையும், விடுதலை செய்யப்படாமல் உள்ள 100க்கும் மேற்பட்ட விசைப் படகையும் விடுவிக்க கோரி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசிடம் வலியுறுத்தி சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், கைது செய்யப்பட்ட பின்னர் தங்களுக்கு நியாயம் கோரிப் போராடுவது எந்த விதத்திலும் நியாயமற்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் சனிக்கிழமை (21-02-2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சமீபத்தில் காரைக்கால், பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 47 மீனவர்களும் அவர்களது 6 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான படகுகள் எல்லை தாண்டி வரும் நிலையில், ஓரிரு படகுகள் மட்டுமே கைது செய்யப்படுவது எமது நீண்டகாலப் பிரச்சினைக்கு ஒரு சிறிய தீர்வாகவே அமைகிறது. இது குறித்து அரசாங்கத்திற்கு நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே தமிழக மீனவர்கள் இக்குற்றச்செயலைச் செய்கிறார்கள். ஒரு நாட்டின் இறையாண்மையையும் எல்லையையும் மீறுகிறோம் என்ற குற்ற உணர்ச்சி கூட அவர்களுக்கு இல்லை. வடபகுதி தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், எமது கடல் வளங்களைச் சூறையாடி, மீன்பிடி உபகரணங்களையும் அவர்கள் சேதப்படுத்துகிறார்கள்.
குற்றச்செயலில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் படகுகளை விடுவிக்கக் கோரியும் மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் தமிழகத்தில் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களை நடத்துவது வேடிக்கையானது. தவறு செய்துவிட்டு அதை நியாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. இந்திய மத்திய மற்றும் தமிழக அரசுகள் தமது மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடற்றொழில் அமைச்சர் இந்திய மீனவர் விவகாரத்தில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பதாக நாங்கள் கருதுகிறோம். வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த விவகாரத்தில் அவர் மௌனம் சாதிப்பதை ஏற்க முடியாது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், அமைச்சருக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்திய மீனவர்களின் வருகையை முற்றாகக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். எமது கடல் பரப்பில் அவர்களை ஒரு வினாடி கூட அனுமதிக்க முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தொடர்ச்சியான கைதுகள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இந்த அத்துமீறலைத் தடுக்க முடியும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசு உதவி பெறும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கக்கோரி தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில், பிப். 24 முதல் அடுத்தகட்ட போராட்டம் நடத்த பல்கலை ஆசிரியர்கள் சங்கம் (ஏ.யு.டி.,), மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலை ஆசிரியர்கள் சங்கம் (மூட்டா) முடிவெடுத்துள்ளன.
தமிழகத்தில் உள்ள பல்கலை, கல்லுாரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி மேம்பாட்டிற்காக தமிழக உயர்கல்வித்துறை சார்பில் 2021 ஜன. 11ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, அரசுக் கல்லுாரிபேராசிரியர்களுக்கு பணிமேம்பாட்டு ஊதியம், நிலுவைத்தொகையுடன் வழங்கப்பட்டது.
அரசு உதவிபெறும் கல்லுாரிகளுக்கான 8 மண்டலங்களில் கோவை, தஞ்சை மண்டலங்களில் மேம்பாட்டு ஊதியம் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட 6 மண்டலங்களில் மேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஆய்வு மாணவர்களை கூடுதலாக பேராசிரியர்கள் சேர்க்க முடியாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் பி.எச்டி., பெறும் வாய்ப்பை இழந்து வருகின்றனர்.
ஐந்து ஆண்டுகளாக ஏ.யு.டி., மூட்டா அமைப்புகள் பல போராட்டங்களை நடத்திய நிலையில் உயர்க்கல்வித்துறை அமைச்சகம் சார்பில்பணிமேம்பாடு வழங்கப்படும் என 3 முறை உறுதியளிக்கப்பட்டது. எனினும்இதுவரை பலன்கள் வழங்கப்படவில்லை. மதுரையில் மூட்டா பொதுச் செயலாளர் செந்தாமரைக் கண்ணன், துணைத் தலைவர் உமா மகேஸ்வரி, ஏ.யூ.டி., பொதுச்செயலாளர் சேவியர் செல்வகுமார் கூறியதாவது:
அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரி எனும் பாகுபாட்டை தவிர்த்து அரசாணைப்படி அனைத்து கல்லுாரி பேராசிரியர்களுக்கும் பணிமேம்பாட்டு ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். இல்லாவிடில் தமிழகம் முழுதும் பிப்.24ல் கல்லுாரி வாயில்கள் முன் மனிதச்சங்கிலி, பிப்.26ல் கல்லுாரிக் கல்வி இணை இயக்குநரிடம் ஆணையின் நகலை திரும்ப வழங்குதல், பிப். 28ல் சாலை மறியல், மார்ச் 5 முதல் சென்னை கல்லுாரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும்.
மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் இன்று (பிப்.21) முதல் 3 நாட்கள் அகில இந்திய பல்கலை, கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில் மாநாடு நடத்தப்படுகிறது. கல்வியாளர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். உயர்க்கல்வித் துறையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றனர்.
அக்குரேகொட இரட்டை படுகொலையின் பிரதான துப்பாக்கிதாரியாக ரூபல் சுரேஷ் என்பவர் செயற்பட்டுள்ளார் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுங்கியுள்ள ‘டுடு’ என்று அழைக்கப்படும் தரிந்து மதுசங்கவின் திட்டமிடல் மற்றும் வழிநடத்தலுக்கு அமைவாக சட்டத்தரணியும், அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20-02-2026) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
போதைப்பொருள் மற்றும் பாதாளக்குழுக்களை இல்லாதொழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு 57 கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 63 ஆக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு இதுவரயான காலப்பகுதியில் 08 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
2025 ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் பாதாளக்குழுக்களுடனான குற்றச்சாட்டில் 679 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.அதேபோல் பாதாளக்குழுக்களிடமிருந்து பெருந்தொகையான துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய படுகொலைகள் பற்றி முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2006.11.10 ஆம் திகதியன்று படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலை குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் லசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜூதின் படுகொலை தொடர்பிலும், ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்னலிகொட காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
2026.02.13 ஆம் திகதியன்று அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 12 விசாரணைக்குழுக்கள் ஊடாக விசாரணைகள் பல கோணங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிதாரிகளுக்கு துப்பாக்கிகளை விநியோகித்த இருவரும், அவர்களுக்கு மோட்டார் வாகனத்தை வழங்கியவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துப்பாக்கிதாரிகளுக்கு தங்குமிடம் வழங்கியவரும் அவர்களுக்கு மோட்டார் வாகனம் வழங்கியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த படுகொலையில் பிரதான துப்பாக்கிதாரியாக ருக்காவெல பகுதியை சேர்ந்த ரூபல் சுரேஷ் என்பவர் செயற்பட்டுள்ளார் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுங்கியுள்ள ‘டுடு’ என்று அழைக்கப்படும் தரிந்து மதுசங்கவின் திட்டமிடல் மற்றும் வழிநடத்தலுக்கு அ மைவாக சட்டத்தரணியும், அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பாதாளக் குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளார்கள். இவ்வாறானவர்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” என்னும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 99,540 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் விநியோகத்தை வலுவிழக்கச் செய்தல், போதைப்பொருளுக்கான கேள்வியை இல்லாமல் செய்தல், நடவடிக்கைகளை விரைவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளித்து, அதன் பயன்பாட்டை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வியாழகிழமை (19-02-2026) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகமைய, 764 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 766 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் மேற்படி சந்தேக நபர்களை கைது செய்திருந்தாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 13 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 3 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய அமைய இதுவரை 99,540 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட 100247சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 524 கிலோ கிராம் ஹெரோயின், 1416 கிலோ கிராம் ஐஸ், 3506 கிலோ கிராம் கஞ்சா, 199 கிலோ கிராம் குஷ், 121 கிலோ கிராம் ஹசிஸ், 239 கிலோ கிராம் மதனமோதகம், 169 மாவா, 11 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 932976 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் 137 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1973 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளது. மேலும் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 1639 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தியினர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான இ. சிவகுமார், வி. அனந்தன் மற்றும் சு. அனுஷா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நல்லூர் பிரதேச சபையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற மாதாந்த அமர்வின் போது, முன்கூட்டியே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத விடயமான ‘பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்க வேண்டும்’ என்ற பிரேரணையை தவிசாளர் சபையில் திடீரென முன்வைத்தார்.
இது தொடர்பில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாத நிலையில், தவிசாளர் முன்கூட்டியே திட்டமிட்டு, ஊடகவியலாளர் என்ற போர்வையில் தனது கட்சி உறுப்பினர் ஒருவரையும் சபைக்கு அழைத்து வந்திருந்தமையானது ஒரு மலிவான அரசியல் நாடகம் என்பதை வெளிப்படுத்தியது.
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தவிசாளர் சபையில் முன்வைத்த போது, தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் எமது கட்சியின் உண்மையான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு எழுந்தது.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எமது நிலைப்பாடு:
இந்தக் கொடிய சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதற்காக ஜே.வி.பி (JVP) / தேசிய மக்கள் சக்தி தொடர்ச்சியாகவும் கடுமையாகவும் போராடி வந்துள்ளது.
கடந்த 1979 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை அடக்குவதற்காக ஜி.எல். பீரிஸ் அவர்களின் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டதே இந்தச் சட்டம். இன்றுவரை பலராலும் நீடிக்கப்பட்டு வந்த இந்தச் சட்டத்தினால் எண்ணற்ற அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இதனை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்; அது நிச்சயம் இந்த அரசால் நீக்கப்படும்.
பழைய சட்டத்தை நீக்கும் அதேவேளை, நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உள்ளது.
இதற்காக ஜே.ஆர். ஜெயவர்த்தனவைப் போலத் தன்னிச்சையான முடிவுகளை இந்த அரசு எடுக்கவில்லை. மாறாக, துறைசார் வல்லுநர்கள் குழுவொன்றால் தயாரிக்கப்பட்ட உத்தேச சட்ட வரைபொன்றை மட்டுமே முன்மொழிவாக வெளியிட்டுள்ளது.
இந்தச் புதிய சட்டம் தொடர்பில் குறைகளைக் கண்டறிவதற்கும், திருத்தங்களை முன்வைப்பதற்குமான போதிய கால அவகாசத்தை அரசு வழங்கி மக்களின் கருத்துக்களைக் கோரியிருந்தது.
ஆனால், தவிசாளரோ அல்லது சபையின் ஏனைய உறுப்பினர்களோ எவ்வித ஆக்கபூர்வமான கருத்துக்களையும் உரிய நேரத்தில் முன்வைக்கவில்லை. சபையில் வைத்து, “இந்த உத்தேச சட்ட வரைபை முழுமையாக வாசித்தீர்களா?” என தவிசாளரிடம் நான் எழுப்பிய கேள்விக்கு, “இல்லை” என்றே அவர் பதிலளித்தார்.
ஏனைய உறுப்பினர்களிடம் கேட்டபோதும் அவர்களும் வாசிக்கவில்லை என்றே கூறினர். இதற்குப் பதிலளிக்க முடியாத சபையிலிருந்த சட்டத்தரணியான உறுப்பினர் ஒருவர், “அப்படிக் கேட்க முடியாது” எனத் தட்டிக் கழிக்கவே முற்பட்டார்.
புதிய சட்டமூலம் என்ன சொல்கிறது, அதில் உள்ள சரத்துகள் என்ன என்பதைப் பற்றி எவ்வித அடிப்படை அறிவும், வாசிப்பும் இன்றி, வெறுமனே அரசியல் இலாபத்திற்காக ஒரு பிரேரணையை நிறைவேற்றுவது முற்றிலும் தவறானது. இதனாலேயே குறித்த பிரேரணையை சபையில் எமது கட்சி எதிர்த்தது.
நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல; மாறாக, எவ்வித வாசிப்புமின்றி பொறுப்பற்ற முறையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையையே எதிர்த்தோம்.
ஆனால், சபையில் நாம் முன்வைத்த இந்த நியாயமான வாதங்களை முழுமையாக இருட்டடிப்புச் செய்த சில ஊடகங்கள், “தேசிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு” எனத் திரிபுபடுத்தி, உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டுள்ளமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உண்மை நிலையினை மக்கள் மன்றத்திற்குத் தெளிவுபடுத்துவதற்காகவே இந்த ஊடக அறிக்கையை வெளியிடுகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசா பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச “நிலைநிறுத்தப் படை” (International Stabilization Force – ISF) முயற்சிக்காக இந்தோனேசியா, மொராக்கோ, கசகஸ்தான், கொசோவோ மற்றும் அல்பேனியா ஆகிய ஐந்து நாடுகள் தங்களது படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான “போர்டு ஆஃப் பீஸ்” கூட்டத்தில், இந்த படையின் நியமிக்கப்பட்ட தளபதி அமெரிக்க இராணுவ ஜெனரல் ஜாஸ்பர் ஜெஃபர்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். காசாவின் எதிர்கால நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான சூழல் குறித்து உலகம் முழுவதும் கவலை அதிகரித்துள்ள நிலையில், இந்த திட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜெனரல் ஜெஃபர்ஸ் கூறியதாவது:
படை மேற்கொள்ளவுள்ள முக்கிய பணிகள்:
இந்த படை ஐ.நா. அல்லது ஆப்பிரிக்க ஒன்றியம் கீழ் இயங்காது. இது அமெரிக்கா வழிநடத்தும் அரசியல் அமைப்பின் கீழ் உருவாகும் என்பதால், சட்டபூர்வத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கூறியதாவது:
இந்தோனேசியா ஏற்கனவே லெபனானில் உள்ள UNIFIL அமைதிப்படை நடவடிக்கைகளில் பெரிய பங்காற்றி வருகிறது. அந்த அனுபவம் காசா போன்ற மிகுந்த பதற்றம் நிறைந்த பகுதிகளில் செயல்படுவதற்கான திறனை வழங்குகிறது.
காசா தற்போது:
என மிகக் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.
சில நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள், இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகள் சர்வதேச சட்ட மீறலாக இருக்கலாம் என்று குற்றம் சாட்டுகின்றன. இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.
பல பாலஸ்தீனர்கள், இந்த சர்வதேச படை:
என்பதில் கவலை தெரிவிக்கின்றனர்.
பாலஸ்தீன அதிகாரிகள் மற்றும் குடிமக்கள்:
பாலஸ்தீன சமூகத்தின் பலர், எந்த சர்வதேச படையும்:
போன்ற அரசியல் தீர்வுகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
ISF இன்னும் திட்டமிடும் நிலையில் உள்ளது. முக்கிய கேள்விகள்:
காசாவின் எதிர்காலம் குறித்து சர்வதேச பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், இந்த படை உண்மையில் அமைதி மற்றும் மறுசீரமைப்புக்கு வழிவகுக்குமா அல்லது புதிய சிக்கல்களை உருவாக்குமா என்பது வரவிருக்கும் மாதங்களில் தீர்மானிக்கப்படும்.
சூடானின் கோர்டோபான் பிராந்தியத்தில் மனிதாபிமான உதவி பொருட்களை எடுத்துச் சென்ற குழுவின் மீது ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF) இயக்கிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது மூன்று உதவி பணியாளர்கள் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று மருத்துவ மற்றும் மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கடுக்லி மற்றும் டில்லிங் நகரங்களுக்கு உணவு மற்றும் அவசர உதவி பொருட்களை கொண்டு சென்ற வாகனங்கள் கார்டாலா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
சூடான் டாக்டர்ஸ் நெட்வொர்க் (SDN) இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்து, இது மனிதாபிமான பணியாளர்களை நேரடியாக குறிவைக்கும் செயல் என்றும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் வெளிப்படையான மீறல் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அல்-ரஹத் பகுதியில் ஐ.நா. வாகனக் குழுவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின், இது உதவி அமைப்புகள் மீது நடத்தப்பட்ட இரண்டாவது பெரிய தாக்குதல். தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக, ஏற்கனவே பஞ்சநிலை மற்றும் இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கோர்டோபானில் உதவி பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
2023 ஏப்ரல் மாதம் முதல் சூடான் கடுமையான உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளது. ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF) மற்றும் சூடான் ஆயுதப்படைகள் (SAF) இடையிலான மோதல்கள் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கான மக்களின் இடம்பெயர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
கார்டோபான் தற்போது மிகுந்த மோதல் நடைபெறும் பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. தலைநகர் கhartoum-இல் நிலையை இழந்த RSF, கோர்டோபான் மற்றும் வட தார்பூர் பகுதிகளில் தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
சமீபத்தில் SAF, டில்லிங் நகரைச் சுற்றியிருந்த RSF முற்றுகையை உடைத்ததாக அறிவித்திருந்தாலும், மனிதாபிமான அமைப்புகள் நிலைமை இன்னும் மிகுந்த பதட்டமாகவே உள்ளதாகவும், டில்லிங் மற்றும் கடுக்லி நகரங்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றன.
உதவி அமைப்புகள், வாகனக் குழுக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் சூடானின் மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்குவதாக எச்சரிக்கின்றன.
நாட்டின் மக்கள் தொகையில் இரண்டு-மூன்றாம் பங்கு தற்போது உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர். பல பகுதிகளில் பஞ்சநிலை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
SDN, சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் RSF மீது உடனடி அழுத்தம் செலுத்தி, மனிதாபிமானப் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச ஊடகங்கள், பாதுகாப்பு காரணங்களால் சம்பவத்தை தன்னிச்சையாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளன.
மனிதாபிமான அமைப்புகள், இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை அடையாளம் காணும் வகையில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருகின்றன.
சூடானில் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களும் உதவி பணியாளர்களும் அதிக ஆபத்தில் உள்ளனர்.
மூன்று உதவி பணியாளர்களின் உயிரிழப்பு, சூடானின் போரால் சிதைந்த பகுதிகளில் மனிதாபிமான பணிகள் எவ்வளவு ஆபத்தான சூழலில் நடைபெறுகின்றன என்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது.
சோமாலியாவில் உயிர் காக்கும் அவசர உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என்று ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டம் (WFP) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ச்சியான வறட்சி, மோதல்கள் மற்றும் சர்வதேச நிதி குறைவு ஆகியவை சேர்ந்து உருவாக்கிய கடுமையான பசியின் பின்னணியில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
WFP வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, சோமாலியாவின் மக்கள் தொகையில் சுமார் 4.4 மில்லியன் பேர் கடுமையான உணவுக் குறைபாட்டில் உள்ளனர். அதில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் தீவிர பசியால் உடனடி உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்.
உலகில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான சோமாலியா, பல ஆண்டுகளாக தொடர்ச்சியான வறட்சி மற்றும் வெள்ளத்தால் விவசாயமும் கால்நடைகளும் பெரிதும் சேதமடைந்துள்ளன. கடந்த நவம்பரில் அரசு தேசிய வறட்சி அவசரநிலையை அறிவித்தது.
சோமாலியாவில் மிகப்பெரிய மனிதாபிமான அமைப்பான WFP, நிதி தட்டுப்பாட்டால் தனது உதவித் திட்டங்களை பெரிதும் குறைக்க வேண்டிய சூழலில் உள்ளது.
2025 தொடக்கத்தில் 2.2 மில்லியன் பேருக்கு வழங்கப்பட்ட அவசர உணவுதொகை தற்போது 6 இலட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது — உதவி தேவைப்படுவோரில் ஏழில் ஒருவருக்கு மட்டுமே உதவி கிடைக்கிறது.
கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்களும் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளன. முந்தைய 4 இலட்சம் பயனாளர்கள் இருந்த நிலையில், தற்போது 90,000 பேருக்கு மட்டுமே உதவி கிடைக்கிறது.
WFP அவசரநிலைத் தயாரிப்பு மற்றும் பதில் நடவடிக்கைகள் இயக்குநர் ராஸ் ஸ்மித், நிலைமை “அதிர்ச்சியூட்டும் வேகத்தில் மோசமடைந்து வருகிறது” என்று எச்சரித்தார். உடனடி நிதி இல்லையெனில், மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு விளைவுகள் சோமாலியாவைத் தாண்டி பிராந்தியத்தையே பாதிக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
சர்வதேச நிதி குறைவு இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது. உதவி திருட்டு குறித்த விசாரணைகளின் பின்னணியில், அமெரிக்கா கடந்த ஆண்டு சோமாலியாவுக்கான உதவியை தற்காலிகமாக நிறுத்தியது; ஜனவரியில் மட்டுமே பகுதி உதவி மீண்டும் தொடங்கப்பட்டது.
மருத்துவ மனிதாபிமான அமைப்புகள், குறிப்பாக Médecins Sans Frontières (MSF), கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, காசநோய், டிப்தீரியா மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளன.
மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தனது செயல்பாடுகளைத் தொடர 95 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதி தேவைப்படுவதாக WFP தெரிவித்துள்ளது. இந்த நிதி கிடைக்காவிட்டால், ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ள உதவித் திட்டங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக நிறுத்தப்படலாம்.
2022 ஆம் ஆண்டில் சர்வதேச சமூகத்தின் விரைவான நடவடிக்கையால் சோமாலியா பஞ்சத்தை நெருங்கிய நிலையில் இருந்து தப்பித்தது. ஆனால் இப்போது அதே அளவிலான ஆதரவு இல்லையெனில், நாடு மீண்டும் பேரழிவை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஈரானில் அண்மையில் வெடித்த பரவலான அரசுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பின், தேஹ்ரான் அரசு பெருமளவு கைது, முறையான கொடுமை, மற்றும் அதிகரித்த தூக்குத் தண்டனைகள் மேற்கொண்டதாக மனித உரிமை அமைப்புகள், நாட்டை விட்டு வெளியேறிய செயற்பாட்டாளர்கள் மற்றும் கைதிகளின் குடும்பங்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
ஈரானிய அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், மனித உரிமை அமைப்புகள் கூறும் தகவல்கள் கடந்த பல ஆண்டுகளில் காணாத அளவுக்கு கடுமையான அடக்குமுறையை சுட்டிக்காட்டுகின்றன.
போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்களில் மாணவர்கள், பத்திரிகையாளர்கள், தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் அடங்குவதாக கூறப்படுகிறது.
பல குடும்பங்கள், தங்கள் உறவினர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான தகவல் வாரக்கணக்கில் வழங்கப்படவில்லை என்றும், வழக்கறிஞரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றன.
கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சிலர், அடித்தல், மின்சாரம் கொடுத்தல், நீண்ட நேர தனிமை சிறை, குடும்பத்தினரை மிரட்டல் போன்ற கொடுமைகள் செய்யப்பட்டதாக சாட்சியம் அளித்துள்ளனர்.
பலர் தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட “ஒப்புதல் அறிக்கைகள்” கொடுமையால் கட்டாயப்படுத்தப்பட்டவை என கூறுகின்றனர்.
சட்ட நிபுணர்கள், இரானின் புரட்சிகர நீதிமன்றங்கள் பல ஆண்டுகளாகவே இத்தகைய கட்டாய ஒப்புதல்களை ஏற்றுக்கொண்டு, சில நிமிடங்களில் முடிவடையும் ரகசிய விசாரணைகளை நடத்தி வருவதாக குறிப்பிடுகின்றனர்.
மனித உரிமை அமைப்புகள் கூறுவதாவது, போராட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
“கடவுளுக்கு எதிரான பகைமை”, “பூமியில் அசம்பாவிதம்” போன்ற பரந்த வரையறைகளைக் கொண்ட குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில தூக்குத் தண்டனைகள் பொதுவாக அறிவிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டதாகவும், மேலும் பலர் ஆபத்தில் உள்ளனர் என்ற அச்சம் நிலவுகிறது.
இரானிய அரசு, இந்த குற்றச்சாட்டுகளை “அடிப்படையற்றவை” என மறுத்துள்ளது.
அதிகாரிகள் கூறுவதாவது, கைது செய்யப்பட்டவர்கள் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்றும், அனைத்து நீதிமுறைகளும் சட்டப்படி நடந்ததாகவும்.
அரசு ஊடகங்கள், போராட்டங்களை வெளிநாட்டு சக்திகள் தூண்டியதாக கூறினாலும், அதற்கு ஆதாரங்கள் இல்லை என செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவின் பல நாடுகள் இரானின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்துள்ளன.
ஐ.நா. கூடுதல் கவலை வெளியிட்டு, இரான் மனித உரிமை பொறுப்புகளை மதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
சில நாடுகள், இரானிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக கூடுதல் தடை நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றன.
இரானுக்குள், கைதிகளின் குடும்பங்கள் சிறைகள் மற்றும் நீதிமன்றங்களின் வெளியே கூடிக் கொண்டு, தங்கள் உறவினர்களின் நிலை குறித்து தகவல் கோருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களில், தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பிடித்துக் கொண்டு அழுகையுடன் நிற்கும் தாய்மார்கள் காணப்படுகின்றனர்.
அரசின் அடக்குமுறையையும் மீறி, இக்குடும்பங்கள் எதிர்ப்பின் புதிய சின்னமாக மாறியுள்ளன.
அரசின் கடுமையான நடவடிக்கைகள், மக்களின் கோபத்தை மேலும் தூண்டி, அரசு–மக்கள் இடையிலான நம்பிக்கையை ஆழமாக பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி, அரசியல் பதற்றம் ஆகியவை தொடரும் நிலையில், இரான் நீண்டகால அசாதாரண நிலைக்கு தள்ளப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
