கலாவதியான வருமான வரி பத்திரத்துடன் வாகனம் செலுத்திய சாரதியை சட்ட நடவடிக்கையிலிருந்து விடுவிப்பதற்காக 5 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரி பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டாளரான சாரதி கடந்த செவ்வாய்க்கிழமை (09-12-2025) மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வாகன சோதனை சாவடியிலிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தை இடைமறித்து சோதனை செய்துள்ளனர். இதன்போது முறைப்பாட்டாளரான சாரதியின் செல்லுபடியாகும் வருமான வரிப் பத்திரம் காலாவதியான நிலையில் வானகத்தை செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த தவரை அறிந்த அதிகாரிகள், அவரை சட்ட நடவடிக்கை சட்ட நடவடிக்கையிலிருந்து விடுவிப்பதற்காகவும், சாரதியிடமிருந்து பெற்ற சாரதி அனுமதிப்பத்திரம், வருமான வரி பத்திரத்தை மீள வழங்குவதற்காகவும் 5 ருபா பணத்தை கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் இலஞ்சமாக கோரி பெற்றுக் கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் வியாழக்கிழமை (11-12-2025) சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.














