அமிழ்து
www.amizhthu.com
  • News in ENGLISH
  • தமிழீழம்
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • நாட்காட்டி
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

இலங்கை

இலங்கைத் தீவு முழுவதும் சுமார் 15,000 நிலச்சரிவு அபாயப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!

by Amizhthu 10 December 2025
written by Amizhthu

நாடளாவிய ரீதியில் சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 5,000 குடும்பங்கள் ஏற்கனவே வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் மண்சரிவு அபாயம் காணப்படும் பெரும்பாலான பிரதேசங்களில் மக்கள் தொடர்ந்தும் வசித்து வருவதாகவும், அவர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மண்சரிவுகள் தொடர்பில் அறிவிக்கப்படும் சம்பவங்கள், கிராம சேவகர் ஊடாக , பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு , இறுதியாக மாவட்டச் செயலாளரை சென்றடையும். அதற்கமையவே குறித்த பிரதேசம் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்.

எனவே ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு தற்போதைய நிலைவரம் குறித்து அறிவிக்கப்படும் வரை மக்கள் அந்த பகுதிகளில் வசிக்காமல் இருப்பதே சிறந்ததாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை நான்கு மாவட்டங்களில் அபாயப் பகுதிகளில் வசிப்போரை வெளியேற்ற அனர்த்த முகாமைத்துவ நிலையம் பணிப்புரைவிடுத்துள்ளது. அதற்கமைய கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட சிவப்பு அறிவிப்புகளின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பிரதேச செயலகப்பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட அபாயப் பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவுக்கான சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய இந்த பகுதிகளில் வசிப்பவர்களை டிசம்பர் 9 – 1 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்கள், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், பொலிஸார் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் இந்த வெளியேற்றும் செயல்முறையை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அந் வகையில் கண் மாவட்டத்தில் ஹதாரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பஹதஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரள, தெல்தோட்டை, பூஜாப்பிட்டிய, கங்காஇஹல கோரள, பன்வில, கங்கா வட கோரள, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிப்பே, தொளுவ, தும்பனை, அக்குரணை, உடுநுவர, பாஹததும்பர ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் கேகாலை, கலிகமுவ, மாவனெல்ல, புளத்கொ{ஹப்பிட்டிய, அரநாயக்க, யாட்டியாந்தோட்ட, ரம்புக்கனை, வாரக்கப்பொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், குருணாகல் மாவட்டத்தில் மாவத்தகம, மல்லாவப்பிட்டிய, ரிதிகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தில் நாவூல, வில்கமுவ, பல்லேப்பொல, அம்பகங்க கோரள, லக்கல உக்குவ, ரத்தோட்ட, மாத்தளை மற்றும் யாத்தவத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
10 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
NEWS

Powerful 7.5-Magnitude Earthquake Off Japan Triggers Tsunami

by Amizhthu 9 December 2025
written by Amizhthu

A strong earthquake measuring 7.5 on the Richter scale jolted northern Japan late Monday night, unleashing tsunami waves and forcing tens of thousands of residents to evacuate coastal areas. The quake struck at approximately 11:15 p.m. local time (2:15 p.m. GMT), with its epicenter located about 80 kilometers off the coast of Aomori Prefecture, the northernmost region of Honshu, Japan’s main island.

Human Impact

  • At least 23 people were injured, including one seriously, according to Japan’s Fire and Disaster Management Agency. Falling objects caused most injuries during the violent shaking.
  • Local media reported several fires in Aomori, prompting 90,000 residents to evacuate to higher ground and emergency shelters.
  • Witnesses described the tremors as unusually intense. “I’ve never experienced such a big shaking,” said Nobuo Yamada, a convenience store owner in Hachinohe, Aomori.

Tsunami and Warnings

  • The Japan Meteorological Agency (JMA) confirmed tsunami waves of up to 70 centimeters in Kuji port, Iwate Prefecture, with smaller surges recorded along other parts of the northeastern coastline.
  • Initial warnings suggested waves could reach up to 3 meters, prompting widespread evacuations across Hokkaido, Aomori, and Iwate.
  • By early Tuesday, authorities lifted the tsunami warnings, though advisories remained in place for potential aftershocks and further seismic activity.

Government Response

Prime Minister Sanae Takaichi announced the immediate formation of an emergency task force to coordinate relief efforts and assess damage. “We are putting people’s lives first and doing everything we can,” she said in a televised statement.

The National Police Agency and local fire departments mobilized rescue teams, while nuclear power plants in the region conducted urgent safety checks. No irregularities have been reported so far.

Regional and Global Concerns

The Pacific Tsunami Warning Center (PTWC) cautioned that hazardous waves could affect areas as far as Russia’s eastern coastline, though the most significant impact was confined to Japan’s northern shores. Seismologists also warned of possible aftershocks and an increased risk of a larger “megaquake” in the coming days.

Context

Japan, located along the seismically active Ring of Fire, experiences frequent earthquakes. The latest tremor is one of the strongest to hit the country in recent years, reviving memories of the devastating 2011 Tōhoku earthquake and tsunami, which claimed nearly 20,000 lives.

In summary: The December 8 earthquake off northern Japan has left dozens injured, triggered tsunami waves, and displaced tens of thousands. Authorities remain on high alert as aftershocks continue to pose risks, while emergency services work to stabilize affected communities.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

கூட்டுறவு சங்க பயிர் கடனுக்கு விண்ணப்பிக்க என்ன ஆவணங்கள் தேவை?

by Amizhthu 9 December 2025
written by Amizhthu

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க இணையதளத்தில், பயிர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, உறுப்பினர் அட்டை எண், ஆதார் எண், நிலத்தின் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை, விவசாயிகள் வைத்திருக்க வேண்டும்’ என, கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் வழங்கப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த அன்றே, விவசாயிகள் வங்கி கணக்கில் கடன் தொகை செலுத்தும் திட்டத்தை, தர்மபுரி மாவட்டத்தில், முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆகஸ்டில் துவக்கி வைத்தார்.

இத்திட்டம், அடுத்த இரு வாரங்களில் மாநிலம் முழுதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


இணையதளத்தில் பயிர் கடனுக்கு விண்ணப்பிக்க, ‘இ – சேவை’ மையங்களை அணுகலாம். விண்ணப்பதாரரின் உறுப்பினர் அட்டை அல்லது உறுப்பினர் எண் அல்லது மத்திய வங்கி கே.சி.சி., சேமிப்பு கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பயிர் செய்ய உத்தேசித்துள்ள நிலத்தின் பட்டா, சிட்டா, குத்தகை நிலமாக இருப்பின் அதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட சான்றுகள் அவசியம்.

இ – சேவை மைய தளத்தில், கூட்டுறவு துறையை தேர்வு செய்து, உறுப்பினர் எண்ணை பதிவு செய்தால், விபரங்களை காணலாம். ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து, கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையில் ஏற்படும் பேரழிவுகளால் இதய நோய் அபாயம் 40 சதவீதம் அதிகரிக்கிறது.

by Amizhthu 9 December 2025
written by Amizhthu

அனர்த்த நிலமைகளின் பின்னர் தனிநபரிடம் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் 40 சதவீதமாக அதிகரிக்கலாம் என சர்வதேச ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இருதய நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வைத்திய நிபுணர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

செய்லோன் தித்வா புயலின் தாக்கத்தால் இலங்கை வெள்ளம், மண்சரிவு என பேரிடரை சந்தித்துள்ளது. இவ்வாறன அனர்த்த நிலமைகளின் பின்னர் தனிநபரிடம் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் 40 சதவீதம் அதிகரிக்கலாம் என சர்வதேச ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பேரிடரின் விளைவாக ஏற்படும் மன அழுத்தம், வீடுகளை இழத்தல் மற்றும் அன்பானவர்களை இழத்தல் போன்ற உளவியல் தாக்கங்கள் ஒரு சிலருக்கு நாளடைவில் இருதய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம்.

இந்த உளவியல் அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத் துடிப்பை வேகப்படுத்துகிறது. அத்தோடு குருதியழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட நோய் நிலமைகளால் அவதிப்படும் நாட்பட்ட நோயாளர்கள், சில நாட்களுக்கு மருந்துகளை உரியவாறு பெறவில்லை எனின் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். மோசமான தூக்கம் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருத்தல் மற்றும் பதற்றம் காரணமாக தூக்கமின்மை ஏற்படுவது, இருதயச் செயல்பாட்டைச் சீர்குலைக்கிறது.

சீரற்ற உணவு மற்றும் பழக்கம்,அவசர கால உணவுகள் மற்றும் அழுத்தத்தைச் சமாளிக்கப் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்குத் திரும்புவதும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது படபடப்பு போன்ற மாரடைப்பு எச்சரிக்கை அறிகுறிகள் ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவமனையை நாடுவது அவசியம். குறிப்பாக இருதய நோயாளிகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் இந்நாட்களில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி!

by Amizhthu 9 December 2025
written by Amizhthu

மீண்டும் தாக்குதல் நடத்துவது தொடர்பாக, பாகிஸ்தானின் பஹவல்பூரில், ஜெய்ஷ் – இ – முகமது, லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள் முக்கிய கூட்டம் நடத்தியதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்., 22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணியர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையான, ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அழிப்பு – இதைத் தொடர்ந்து, மே 7ல் பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதிகளில், நம் விமானப்படை அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதில், பாகிஸ்தானின் பஹவல்பூர், முரிட்கே, சியால்கோட் உட்பட ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், பஹவல்பூரில் செயல்பட்ட ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் தலைமையகம் உட்பட, பயங்கரவாதிகளின் முக்கிய கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில், 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சூழலில், கடந்த மாதம் 10ம் தேதி, தலைநகர் டில்லியில் உள்ள செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில், 15 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில், பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதல் என்பது உறுதியானது.

இந்த விவகாரத்தில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு பின்னணியில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. டில்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் இது உறுதியானது.

நம் நாட்டில் அடுத்தடுத்து பல்வேறு தாக்குதல் நடத்த பாக்., பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டிருந்ததாக, உளவுத்துறை முன்னதாக எச்சரித்திருந்த சூழலில், டில்லியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

கட்டுமானம் – ‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையில் தகர்க்கப்பட்ட முகாம்களில் மீண்டும் கட்டுமான பணிகள் நடப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் பயங்கரவாதிகள் மீண்டும் பெரிய கூட்டத்தை நடத்தி ஆலோசித்ததாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பாகிஸ்தானின் பஹவல்பூரில் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையிடம் செயல்பட்ட பகுதியில், சமீபத்தில் பயங்கரவாதிகள் கூட்டம் நடத்தி முடித்துள்ளனர்-. ஜெய்ஷ் – இ – முகமது, லஷ்கர் – இ – தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் கூட்டாக ஆலோசனை நடத்தியுள்ளனர். லஷ்கர் அமைப்பின் துணை தலைவர் சைபுல்லா கசூரி, அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ராவல்கோட்டில், ‘ஆப்பரேஷன் சிந்துார்’ தாக்குதலின் போது அழிக்கப்பட்ட இடத்தில், மீண்டும் கட்டுமான பணிகள் நடந்து வரும் சூழலில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

டில்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து, நம் நாட்டில் புதிதாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசித்தது தெரியவந்துள்ளது.

பாக்., ராணுவத்தின் உதவியுடன் இந்த இரு பயங்கரவாத அமைப்புகளும் இணைந்து புதிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊடுருவல் – பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பீம்பர் பர்னாலா, தற்கொலைப் படை தாக்குதலுக்கான மையமாக உருவாகி வருகிறது. அங்கிருந்து, சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்தும், பஹவல்பூர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கைக்கு பின், கடந்த செப்., முதல் நம் எல்லைகளின் வழியாக பாக்., பயங்கரவாதிகள் அதிகளவில் ஊடுருவி வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையில் டிட்வா சூறாவளி 81,000 வீடுகளை சேதப்படுத்தியது, 635 பேர் கொல்லப்பட்டனர், 192 பேரைக் காணவில்லை.

by Amizhthu 9 December 2025
written by Amizhthu

தென்கீழ் பருவ பெயர்ச்சி காலநிலை வலுவடைந்து வருவதால் எதிவரும் தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடி மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை திறக்க வேண்டியேற்படும் என்பதால், தற்போது அவை சிறியளவில் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த வாரம் முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலையால் நேற்று திங்கட்கிழமை மாலை வரை 635 பேர் உயிரிழந்துள்ளதோடு, 192 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 512 123 குடும்பங்களைச் சேர்ந்த 1, 766, 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5325 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 81 163 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. எனினும் தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருகிறது. அந்த வகையில் 22 218 குடும்பங்களைச் சேர்ந்த 69 861 பேர் 690 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ள.

காலநிலை

நாடளாவிய ரீதியில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்ககப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை

பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கோந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலாபத்திலிருந்து புந்தனம் மற்றும் காங்கோந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

கடல் நிலை

சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் காங்கோத்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓhளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை, காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டியில் ஹதரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பஹஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரள, தெல்தோட்டை, பூஜாபிட்டிய, கங்கா இஹல கோரள, பன்வில, கங்வத்த கோரள, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிப்பே, தொலுவ, தும்பனை, அக்குரனை, உடுநுவர மற்றும் பஹததும்பர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலையில் கேகாலை, கலிகமுவ, மாவனல்ல, புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, ஹட்டியாந்தோட்டை, ரம்புக்கனை மற்றும் வரகாலப்பொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், குருணாகலில் மாவத்தகம, மல்லவபிட்டி மற்றும் ரிதீகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளையில் நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பன்கங்க கோரள, லக்கல பல்லேகம, உக்குவெல, ரத்தோட்டை, மாத்தளை மற்றும் யட்டவத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026’ம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

by Amizhthu 9 December 2025
written by Amizhthu

இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும் தன்னிச்சையான அதிகாரம் ஊடாக பாதீடு நடைமுறையாககின்றது.

ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில் குறித்த பாதீட்டை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதறகான விசேட அமர்வு இன்று திங்கட்கிழமை (08-12-2025) அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசளர் அன்னராச தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சபையின் வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், உதவி கோரியுள்ள முன்மொழிவுகள், சிறப்பு வருவாய் முயற்சிகள், உள்ளிட்ட பல திருத்தங்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்கள் நலனோ தற்போதைய தேவை கருதிய நடைமுறைக்கு ஏற்றதோ இல்லாது குறித்த பாதீடு மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், நடைமுறைக்கு சாத்தியமான விடையங்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் கூறி உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.

வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு இரண்டாவது தடவையாகவும் விடப்பட்டது.

பாதீட்டை நிறைவேற்றுவதற்காக விடப்பட்ட வாக்கெடுப்பின் போது எதிராக 8 வாக்குகளும் ஆதரவாக 5 வாக்கிகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த பாதீடு மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த பிரதேச சபையின் 13 மொத்த உறுப்பினர்களில் 4 ஆசனங்களை ஈ.பி.டி.பியும் தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களையும்

தேசிய மக்கள் கட்சி 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 3 உறுப்பினர்களையும், சங்கு சின்னத்தில் போட்டியிட்ட கட்சி 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன.

குறித்த பிரதேச சபையின் ஆசனங்களில் முன்னிலை பெற்றிருந்த ஈ.பி.டி.பி ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஏது நிலையை ஈ.பி.டி.பி வழங்கியிருந்தது.

இதன் அடிப்படையில் 2 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசுக் கட்சியானது, 4 ஈ.பி.டி.பி உறுப்பினர்களது ஆதரவுடன் ஆட்சியமைக்க தனது முன்மொழிவை சபையில் பிரஸ்தாபித்திருந்தது.

ஆனால் 3 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தேசிய மக்கள் சக்தியுடனான நடு நிலமை இணக்கப்பாடுடன் சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட கட்சியின் ஓர் ஆசனம், தமிழரசுக் கட்சியின் ஓர் ஆசனத்தை கொண்டு சபையின் ஆட்சி அதிகாரத்தை வசப்படுத்தியிருந்தது.

இன்றைய வாக்கெடுப்பில் எதிராக ஈ.பி.டி.பியின் 04 வாக்குகளும், என்.பி.பியின் 03 வாக்குகளும், தமிழரசு கட்சியின் ஒரு வாக்கும் பதியப்பட்டன.

உள்ளூராட்சி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் இரண்டாவது தடவையும் பாதீடு தோற்கடிக்கப்பட்டால் அது தவிசாளரது தன்னிச்சையான சிறப்பு அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு செயலாக்கம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

புளியம்பொக்கனை பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர்

by Amizhthu 9 December 2025
written by Amizhthu

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் ஏ35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியம்பொக்கனை பாலம் சேதமடைந்திருந்தது.

இதன் காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்து காணப்பட்டது. கடமைகளுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள் தொடக்கம் பொது மக்கள் வரை இந்த பாதை ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதனால் கடும் நெருக்கடிக்குள் உள்ளாகினர்.

எனவே இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பாலத்தை புனரமைத்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் வகையில் இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவுக்கு பாலத்தை புனரமைக்கும் பொறுப்பை இலங்கை அரசு வழங்கியிருந்தது.

அதற்கமைவாக கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் குறித்த பாலத்தை புனரமைக்கும் பணியினை ஞாயிற்றுக்கிழமை (07-12-2025) முதல் தொடங்கியிருக்கின்றனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
ஆப்பிரிக்கா

பெனின் படையொதுக்க முயற்சி தோற்கடிக்கப்பட்டது — விசுவாசமான படைகள் கட்டுப்பாட்டை மீட்டெடுத்தன; கைது செய்யப்பட்டவர்கள்

by Amizhthu 9 December 2025
written by Amizhthu

முன்னுரை

ஒரு குறுகியகால அரசுப் பதவி கைப்பற்றல் முயற்சி ஞாயிற்றுக்கிழமை தோற்கடிக்கப்பட்டது என்று பெனின் அரசு மற்றும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். சில படையினர்கள் தேசிய தொலைக்காட்சி நிலையத்தை கைப்பற்றியதாகவும், அரசியலமைப்பை இடைநீக்கம் செய்ததாகவும் அறிவித்ததாகவும் அறிக்கைகள் கூறுகின்றன; பின்னர் விசுவாசமான படைகள் கட்டுப்பாட்டை மீட்டெடுத்து ஒளிபரப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

நிகழ்வு விவரம்

ஞாயிற்றுக்கிழமை காலையில், மிலிட்டரி கமிட்டி ஃபார் ரீஃபவுண்டேஷன் என்ற குழு தேசிய தொலைக்காட்சியில் தோன்றி, பாட்டிரிஸ் டாலோன் (Patrice Talon) அவர்களை பதவியிலிருந்து நீக்கி அரசியலமைப்பை இடைநீக்கம் செய்ததாக அறிவித்தது. அவர்கள் தலைவராக லெஃப்டனன்ட் கொலனல் பாஸ்கல் டிக்ரி (Pascal Tigri) என்பவரை நியமித்ததாக கூறப்பட்டது. தொலைக்காட்சி மற்றும் ரேடியோ ஒளிபரப்பு சில நேரம் துண்டிக்கப்பட்டது; கோட்டுனோவின் பல பகுதிகளில் சுட்டுக்கொலைக்கான சத்தங்கள் கேட்டதாக உள்ளன.

அரசின் பதில் மற்றும் கைது செய்திகள்

உள்துறை அமைச்சர் அலாச்ஸேன் செய்தூ (Alassane Seidou) ஒரு வீடியோவழி செய்தியில் படையொதுக்க முயற்சி தோற்கடிக்கப்பட்டு, பெனின் இராணுவம் குடியரசுக்கு விசுவாசமாக இருந்ததாக தெரிவித்தார். அரசு மற்றும் இராணுவ ஆதாரங்கள் பின்னர் தொடர்புடையவர்களை கைது செய்துள்ளதாக அறிவித்தன; ஆரம்ப அறிக்கைகளில் எண்ணிக்கை மாறுபட்டாலும், ஒரு அரசு அறிக்கை சுமார் 12–14 பேர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டது. பாதுகாப்பு சேவைகள் சந்தேக நபர்களை மேலும் கைது செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர்.

பிராந்திய மற்றும் சர்வதேச பதில்கள்

பெனின் அருகிலுள்ள நாடுகளிடமிருந்து விரைவான ஆதரவு கோரப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்டது. நைஜீரியா கோட்டுனோவின் கோரிக்கையின்படி சில விமான மற்றும் நிலத்தடி படைகள் மற்றும் தொலைக்காட்சி நிலையத்தை மீட்க உதவியதாகவும், பொருளாதார மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் கூட்டமைப்பு (ECOWAS) பல உறுப்பினர் நாடுகளின் ஸ்டாண்ட்பை படையை அனுப்பி அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு தயாராக இருப்பதாக அறிவித்தது. ஆப்பிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகள் மற்றும் பல சர்வதேச நாடுகள் இந்த முயற்சியை கண்டித்து அமைதியையும் சட்டபூர்வத்தையும் கோரினர்.

நிலைமுறை நிலவரம்

திங்கட்கிழமைக்குள் கோட்டுனோவில் பெரும்பாலான வணிக மற்றும் போக்குவரத்து செயல்பாடுகள் மீண்டும் இயல்புக்கு வந்தன; இருப்பினும் பாதுகாப்பு படைகள் பல்வேறு முக்கிய சாலைகளில் மற்றும் அதிபர் இல்லத்திற்கு அருகில் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டன. தொடக்க கைப்பற்றலின் போது பிடிக்கப்பட்ட சில உயர் அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டதாகவும், ஓடியுபோன சில படையினர்களைத் தேடி விசாரணைகள் தொடர்ந்துவருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னணி மற்றும் தாக்கங்கள்

இந்த படையொதுக்க முயற்சி, சமீப ஆண்டுகளில் சஹேல் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் ஏற்பட்ட இராணுவ இடையீடுகளின் தொடரில் நிகழ்ந்துள்ளது. பெனின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2026 ஏப்ரலில் நடைபெறவிருக்கிறது; அதற்கு முன் அரசியல் மோதல்கள் மற்றும் வடப் பகுதிகளில் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்துள்ளன. இந்த முயற்சியை மேற்கொண்டவர்கள் இதை தங்கள் செயலை நியாயப்படுத்த காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர். பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகள் அரசியலமைப்பை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கவனித்து வருவார்கள்.

எதிர்பார்க்க வேண்டியவை

அதிகாரிகள் குற்றவாளிகளை விரைவாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுப்பதாகவும், விசாரணைகள் தொடரும் போது மேலும் கைது செய்யப்பட்டவர்கள் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் அரசின் விசாரணை நடைமுறை, 2026 தேர்தலின் நியாயம் மற்றும் பிராந்திய நிலைத்தன்மை ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களாக உள்ளன.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
சர்வதேசச் செய்திகள்

பைனான்ஸ் முழுமையான ஒழுங்குமுறை அங்கீகாரம் பெற்றது

by Amizhthu 9 December 2025
written by Amizhthu

கிரிப்டோ துறையில் வரலாற்றுச் சாதனை

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான பைனான்ஸ் (Binance), அபுதாபி குளோபல் மார்க்கெட் (ADGM) நிதி சேவைகள் ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து (FSRA) முழுமையான அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த உரிமம் 2026 ஜனவரி 5 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், ADGM-இன் கடுமையான கண்காணிப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தரநிலைகளின் கீழ் செயல்படும் முதல் உலகளாவிய கிரிப்டோ பரிமாற்றமாக பைனான்ஸ் உருவாகிறது.

அங்கீகாரத்தின் அமைப்பு

பைனான்ஸ் தனது உலகளாவிய செயல்பாடுகளை அபுதாபியில் பதிவு செய்யப்பட்ட மூன்று தனித்தனி நிறுவனங்கள் வழியாக நடத்தும்:

  • நெஸ்ட் எக்சேஞ்ச் லிமிடெட் – ஸ்பாட் மற்றும் டெரிவேட்டிவ் வர்த்தகத்திற்கான Recognised Investment Exchange.
  • நெஸ்ட் கிளியரிங் அண்ட் கஸ்டடி லிமிடெட் – பரிமாற்றத் தீர்வு மற்றும் டிஜிட்டல் சொத்துக்களின் பாதுகாப்பிற்கான Recognised Clearing House.
  • நெஸ்ட் டிரேடிங் லிமிடெட் – OTC வர்த்தகம் மற்றும் மாற்று சேவைகளுக்கான Broker-Dealer.

இந்த அமைப்பு பாரம்பரிய நிதி சந்தை கட்டமைப்பை பிரதிபலிக்கிறது. வெளிப்படைத்தன்மை, ஆளுமை மற்றும் அபாய மேலாண்மை ஆகியவை உறுதிசெய்யப்படுகின்றன.

தலைமைத்துவத்தின் கருத்துகள்

பைனான்ஸ் இணை-தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட் தெங் கூறுகையில், இந்த அங்கீகாரம் நிறுவனத்தின் ஒழுங்குமுறை இணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் பயனர் பாதுகாப்பு குறித்த உறுதியை வெளிப்படுத்துகிறது. ADGM-இன் மதிப்புமிக்க சட்டப்பூர்வ அமைப்பின் கீழ் செயல்படுவது, நிறுவன முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

ADGM தலைவர் அஹ்மத் ஜாசிம் அல் சாபி பைனான்ஸை வரவேற்று, அபுதாபி டிஜிட்டல் நிதி புதுமை மற்றும் ஒழுங்குமுறை மையமாக உருவெடுத்து வருவதை வலியுறுத்தினார்.

சந்தை தாக்கம்

அறிவிப்பு வெளியானவுடன் பைனான்ஸின் சொந்த டோக்கன் BNB விலை 2% உயர்ந்து, $910 வரை சென்றது. நிபுணர்கள், இந்த அங்கீகாரம் BNB-ஐ $1,000 இலக்கை நோக்கி நகர்த்தும் என எதிர்பார்க்கின்றனர்.

உலகளாவிய முக்கியத்துவம்

300 மில்லியன் பயனர்கள் மற்றும் $125 டிரில்லியன் வர்த்தக அளவு கொண்ட பைனான்ஸ், முழுமையான ஒழுங்குமுறை சூழலுக்குள் நுழைவது கிரிப்டோ துறைக்கு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இது, உலகளாவிய பரிமாற்றங்கள் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை நாடும் புதிய போக்கை வலியுறுத்துகிறது.

ADGM-இன் முழுமையான அங்கீகாரத்துடன் பைனான்ஸ், உலகளாவிய கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறையில் புதிய யுகத்தை தொடங்கியுள்ளது. 2026 ஜனவரி 5 முதல், பைனான்ஸ் தனது ஒழுங்குமுறை செயல்பாடுகளைத் தொடங்கும் நிலையில், இந்த முன்னேற்றம் நிறுவன நம்பிக்கையை மாற்றி அமைத்து, பிற பரிமாற்றங்களுக்கு முன்னுதாரணமாக அமையும்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

“இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

by Amizhthu 8 December 2025
written by Amizhthu

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி போராடுவோம் என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிறிஸ்ணன் அகிலனை திங்கட்கிழமை (08-12-2025) நேரில் சந்தித்து, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் எமது கடல் வளங்கள் அழிக்கப்படுவதும் , எமது வலைகள் சேதமாக்கப்பட்டு, எமது வாழ்வாதாரத்தை அழிப்பதுடன், பொருளாதார ரீதியாகவும் எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.

எனவே இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி அவர்களுக்கு எதிராக போராடுவோம்.

இதன் முதல் கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில், நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளோம். அங்கு மாவட்டச் செயலக வாயிலை மூடி எமது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். அதொரு என தெரிவித்தனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
8 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

“அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, திமுகவின் ஊழல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயமாக பொறுப்பேற்கப்படுவார்கள்” என்று இபிஎஸ் கூறினார்.

by Amizhthu 8 December 2025
written by Amizhthu

அமைச்சர் நேரு மீதான ரூ.1020 கோடி ஊழல் புகார் தொடர்பாக, தமிழக போலீஸ் டிஜிபிக்கு, அமலாக்கத்துறையினர், இரண்டாம் முறையாக கடிதம் எழுதியுள்ளனர். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்கத்துறை , தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் நேரு, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது.கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு, 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இதெல்லாம் ‘Tip of the Iceberg’ தான் என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, இதனை முழுமையாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளது. வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் ‘கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்’ தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.

ஏற்கனவே அமலாக்கத்துறை அனுப்பிய ரூ. 888 கோடி வேலைக்கு பணம் கொடுத்த முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே,

-மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம்.

-ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம்.

-பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாராளமாக வழங்கலாம்.

அவ்வளவு ஏன், தமிழகத்துக்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்.இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் தானும், தன் சகாக்களும் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் ?காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன.

அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி. உண்மையிலேயே ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். செய்வாரா? இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
8 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • News in ENGLISH
  • தமிழீழம்
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • நாட்காட்டி
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d