அமிழ்து
www.amizhthu.com
  • World News
  • தமிழீழம்
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • நாட்காட்டி
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Tag:

SRI LANKA WEATHER

இலங்கை

இலங்கை வானிலை

by Amizhthu 21 February 2026
written by Amizhthu

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடல் பிராந்தியங்களில் வடகிழக்குத் திசையில் இருந்து வட திசையை நோக்கியும் நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on X (Opens in new window) X
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • More
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Threads (Opens in new window) Threads
  • Share on Tumblr (Opens in new window) Tumblr

Like this:

Like Loading...
21 February 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • World News
  • தமிழீழம்
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • நாட்காட்டி
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d