U19 கிரிக்கெட் உலகக் கோப்பை: வைபவ் சூர்யவன்ஷியின் 80 பந்துகளில் 175 ரன்கள், இறுதிப் போட்டியில் இந்தியா 411 ரன்கள் எடுக்க உதவியது.
ஹராரே:
ஜிம்பாப்வே, நமீபியாவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலகக்கோப்பை(50 ஓவர்) 16வது சீசன் நடக்கிறது. ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடந்த பைனலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரராக வந்த ஆரோன் ஜார்ஜ் 9 ரன்னுக்கு அவுட் ஆனார். இருப்பினும் மற்றொரு வீரர் வைபவ் சூர்யவன்ஷி வாணவேடிக்கை காட்டினார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்த அவர், சிக்சர் மற்றும் பவுண்டரி என அடித்துத் தள்ளினார்.அவர் 80 பந்துகளில் 175 ரன் எடுத்து அவுட் ஆனார்.
கேப்டன் ஆயுஷ் மத்ரே 53 , வேதாந்த் திரவேதி 32, விஹான் மல்ஹோத்ரா 30, அபியான் குன்டு 40, அம்பரீஸ் 18 ரன் எடுக்க இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன் எடுத்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 412 ரன் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.