மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் நடந்து வரும் தேடுதல் நடவடிக்கையில் ஏழு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரா, கட்சிரோலி.
மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மற்றும் சத்தீஸ்கரின் நாராயண்பூர் எல்லையில் உள்ள போடேவாடா கிராமத்தில், நக்சல்கள் பதுங்கி யிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மஹாராஷ்டிராவில் உள்ள ‘சி – 60’ என்ற சிறப்பு நக்சல் எதிர்ப்பு போலீசார், மத்திய ரிசர்வ் போலீசாருடன் இணைந்து, நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, நக்சல் முகாம் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஏழு நக்சல்கள் கொல்லப்பட்டனர். இவர்களில், தெலுங்கானாவைச் சேர்ந்த நக்சல் இயக்க தலைவர் பிரபாகரும் அடங்குவார். இவரைப் பற்றி தகவல் அளிப்பவருக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, நக்சல்கள் தாக்கியதில் சி – 60 போலீஸ்காரர்கள் தீபக் சின்னா மாதவி, 38, மற்றும் ஜோகா மாதவி ஆகியோர் காயம் அடைந்தனர். இருவரும் ஹெலிகாப்டர் மூலம் பாம்ரகாடு பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த போலீஸ் காரர் தீபக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.