பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமைக்குரல் போராட்டம்
04.02.2026 பிரித்தானியா
தமிழீழமே ஒரே தீர்வு என்று வலியுறுத்தி பிரித்தானிய மன்னர் மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கில் நகரும் தமிழர் படை
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பேரெழுச்சியடன் ஆரம்பமான கரிநாள் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்று கூடிய வண்ணம் உள்ளனர்.

சிறிலங்கா அரச தூதரகத்தின் முன் வானுயர ஒலித்திக்கொண்டிருந்த கொட்டொலிகள் மத்தியில் மாபெரும் போராட்டம் தற்போது பிரித்தானியப் பேர்ரசின் மன்னர் மாளிகை நோக்கி தமிழர் படைகள் எம்மினத்தின் தன்னாட்சிக்கான உரிமைக்குரலினை உரத்துக்கூறியபடி நகர்ந்துகொண்டிருக்கிறது..இப்போராட்டம் பிரித்தானிய மன்னர் மாளிகையை சென்றடையவுள்ளது.
மக்கள் வெள்ளமென அலையலையாக திரண்டு போராட்டப்பாதை எழுச்சி கொண்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் கரிநாளான இன்று எழுச்சிகொண்ட மக்கள் போராட்டங்களை சிறிலங்கா அரசு நசுக்க முற்பட்ட வேளையிலும் தடைகளை உடைத்து போராட்டங்கள் நடைபெற்றுள்ள சூழமைவில், பிரித்தானிய மன்னரை நோக்கிய இப்போராட்டமும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.







