12 நவம்பர் 2025 புதன் – இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

இன்றுஅஷ்டமி
12 நவம்பர் 2025 புதன்
தேதி26 – ஐப்பசி – விசுவாவசு
புதன்
நல்ல நேரம்09:15 – 10:15 கா / AM
04:45 – 05:45 மா / PM
கௌரி நல்ல நேரம்10:45 – 11:45 கா / AM
06:30 – 07:30 மா / PM
இராகு காலம்12.00 – 01.30
எமகண்டம்07.30 – 09.00
குளிகை10.30 – 12.00
சூலம்வடக்கு
பரிகாரம்பால்
சந்திராஷ்டமம்மூலம் பூராடம்
நாள்கீழ் நோக்கு நாள்
லக்னம்துலா லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 50
சூரிய உதயம்06:12 கா / AM
ஸ்ரார்த திதிஅஷ்டமி
திதிஇன்று அதிகாலை 04:46 AM வரை சப்தமி பின்பு அஷ்டமி
நட்சத்திரம்இன்று அதிகாலை 01:03 AM வரை பூசம் பின்பு ஆயில்யம்
சுபகாரியம்கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்.
தமிழ் நாட்காட்டி நவம்பர் 2025
அமாவாசை19-நவம்பர்-2025 புதன்கிழமை
பௌர்ணமி05-நவம்பர்-2025 புதன்
கார்த்திகை06-நவம்பர்-2025 வியாழன்
சஷ்டி விரதம்26-நவம்பர்-2025 புதன்
சங்கடஹர சதுர்த்தி08-நவம்பர்-2025 சனி
சதுர்த்தி24-நவம்பர்-2025 திங்கள்
பிரதோஷம்03-நவம்பர்-2025 திங்கள்
17-நவம்பர்-2025 திங்கள்
  திருவோணம்26-நவம்பர்-2025 புதன்
மாத சிவராத்திரி18-நவம்பர்-2025 செவ்வாய்
ஏகாதசி01-நவம்பர்-2025 சனி
16-நவம்பர்-2025 ஞாயிறு
அஷ்டமி12-நவம்பர்-2025 புதன்
28-நவம்பர்-2025 வெள்ளிக்கிழமை
நவமி13-நவம்பர்-2025 வியாழன்
29-நவம்பர்-2025 சனிக்கிழமை
அரசு விடுமுறை நாட்கள்அரசு விடுமுறை இல்லை.
திருமண நாட்கள்03-நவம்பர்-2025 திங்கட்கிழமை
வளர்பிறை

10-நவம்பர்-2025 திங்கட்கிழமை
தேய்பிறை

16-நவம்பர்-2025 ஞாயிறு
தேய்பிறை

23-நவம்பர்-2025 ஞாயிறு
வளர்பிறை

27-நவம்பர்-2025 வியாழன்
வளர்பிறை

30-நவம்பர்-2025 ஞாயிறு
வளர்பிறை
திருவிழாக்கள்பண்டிகை நாட்கள் இல்லை.

இன்றைய ராசி பலன் | 12 நவம்பர் 2025 புதன்

மேஷ ராசி அன்பர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி அன்பர்களே, தெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

மிதுன ராசி அன்பர்களே, புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உறவினர்கள் இல்லம் தேடி வருவர். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே, எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. பிரியமானவர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமை இருக்கும்.

கன்னி ராசி அன்பர்களே, குடும்பம் வளர்ச்சி பாதையில் செல்லும். உறவினர்களுடன் சின்ன மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

துலாம் ராசி அன்பர்களே, குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். மனம் அழுத்தம் குறையும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

விருச்சிக ராசி அன்பர்களே, தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எப்போதும் அவரச முடிவுகளை தவிர்க்கவும். புது நட்பு வட்டம் உருவாகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே, குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். பெண்கள் வழியில் சில ஆதாயம் உண்டு. புது தொழில் யோகம் அமையும்.

மகர ராசி அன்பர்களே, குடும்ப செல்வாக்கு உயரும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கும்ப ராசி அன்பர்களே, குடும்ப பணிகளை கவனிக்க வேண்டிவரும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

மீன ராசி அன்பர்களே, சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் அமைதி நிலவும்.


தமிழ் ராசி பலன் வாரந்தோறும் | 10-11-2025 To 16-11-2025

மேஷ ராசி அன்பர்களே

மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும். இஷ்ட தெய்வ வழிபாடு மனநிம்மதியை தரும். பல நல்ல திட்டங்களை செயல்படுத்த வழி கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். இழுபறியில் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப சிக்கல்கள் வெகுவாக குறையும். தேவையற்ற மனசஞ்சலத்தை தவிர்க்கவும். கடன் தொல்லை நீங்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். கணவன் மனைவி இடையே கருத்துவேற்றும் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உத்தியோகத்தில் அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதையும் சுயமாக சிந்தித்து முடிவு செய்யவும். யாருக்காகவும் உங்கள் சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை இருக்கும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் கூட இப்போது ஒதுங்கி நிற்பர். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும். வெளிநாட்டு பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே சின்னச் சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

பரிகாரம் : பெருமாளை வணங்கி வழிபடவும்

மிதுன ராசி அன்பர்களே

மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. நீங்கள் எதிர்பார்த்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். புது நண்பர்களுடன் பழகும்போது ஜாக்கிரதையாக இருக்கவும், ஏன் எனில் அவர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புண்டு. உறவினர்கள் அன்பு பாராட்டுவர். கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு மாறும். உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம். கவனமுடன் இருக்கவும். உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவர். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமும், மற்றவர்களிடம் பேசும் வார்த்தையில் எச்சரிக்கையும் தேவை. உத்தியோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

பரிகாரம் : குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

கடக ராசி அன்பர்களே

கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்ப நிதி நிலைமை சீரடையும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். வாக்கு சாதுரியம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமாக நடக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். குடும்பத்தில் பொருள் வரவு அதிகரிக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்பட்டு வெற்றி காண முடியும். விலகிப்போன சொந்தங்கள் மீண்டும் உங்களை தேடி வருவர். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். திருமணம் தொடர்பான காரியங்கள் கைகூடும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். உத்யோகத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்.

சிம்ம ராசி அன்பர்களே

சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் உண்டு. திட்டமிட்ட வேலைகள் எந்தவித தடைகளின்றி முடியும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். திருமணம் காரியம் கைகூடும். கணவன், மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். முக்கிய திட்டங்களை பற்றி வெளியில் விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மனநிறைவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும்.

பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

கன்னி ராசி அன்பர்களே

கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு விஷயத்திலும் தொடர்ந்து முயற்சி எடுத்தால் வெற்றி நிச்சயம். புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும். குடும்ப வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்யவும். யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். பெற்றோர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். ஒரு சிலருக்கு புது வீடு வாங்கும் யோகம் அமையும். குலதெய்வ வழிபடு சிறப்பான பலனை தரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும். தடைப்பட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். உத்தியோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

பரிகாரம் : விஷ்ணுவை வணங்கி வழிப்படவும்

துலாம் ராசி அன்பர்களே

துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டியிருக்கும். எங்கும், எதிலும் சாதகமான சூழல் உண்டு. புதிய நட்பு வட்டாரம் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் திருப்திகரமான சூழல் இருக்கும். நீங்கள் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பழைய கடன்களை ஓரளவு அடைக்க முடியும். திருமணம் காரியம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சீக்கிரமாக நடந்து முடியும். எதிலும் முன்னேற்றமான நிலை காணப்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். மனதில் இருந்து வந்த சஞ்சலம் மாறும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்குக் கை கொடுப்பர். முன்கோபத்தைக் குறைப்பது நன்மையைத் தரும். பணநெருக்கடி குறையும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. உடல் உபாதைகள் நீங்கும். குடும்ப செலவைக் குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான யோசனை வரும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வந்து இணைவர். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.

பரிகாரம்: முருகரை விரதமிருந்து வழிபடவும்.

தனுசு ராசி அன்பர்களே

தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். எதிர்ப்புகள் தானாக விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உடல் நலம் மேம்படும். குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். உறவினர்களுடன் அனுசரித்து போவது நல்லது. அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கணவன் மனைவி மனம் விட்டு பேசுவது நன்மை தரும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு பெருகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். உங்களால் முடியாத விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கியே இருப்பது நல்லது. வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்.

மகர ராசி அன்பர்களே

மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப விவகாரங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். வாக்கு சாதுரியம் உண்டாகும். தெய்வ பிராத்தனைகள் நிறைவேறும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. குடும்பத்தில் வரவுகள் அதிகம் இருந்தாலும் செலவுகள் ஒருபடி மேலே தான் இருக்கும். முக்கிய நபர்களின் ஆதரவு பெருகும். புதிய வீடு, வாங்க கட்டுவது தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். குடும்பத்தில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதுடன் மீண்டும் கடன் கேட்காத நிலை ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனை கை கொடுக்கும். உத்தியோகத்தில் பொறுமை அவசியம். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.

பரிகாரம் : விநாயகரை அருகம்புல் வைத்து வழிபடவும்.

கும்ப ராசி அன்பர்களே

கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் அதிக செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க சிக்கனத்தை கையாளுவது நன்மை தரும். மனதில் புது தெம்பும், உற்சாகமும் தோன்றும். உறவினர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பாணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும். மனச்சுமை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நல்ல செய்து ஒன்று காதில் வந்து விழும். பெற்றோர் உடல் நலனில் கவனம் தேவை. மறைமுக எதிரிகள் பலம் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கடன் பிரச்சனை தலைதூக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணம் ஏற்படும்.

பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வியாழக்கிழமையில் வழிபடவும்.

மீன ராசி அன்பர்களே

மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் சாமர்த்தியமான செயல்களால் பல சாதனைகளை செய்ய முடியும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக அமையும். மன தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். வேண்டியவர்களுக்கு உதவி செய்வதால் மனமகிழ்ச்சி வரும். கணவன், மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். வாகன பயணங்களிலும் இரவு நேர பயணங்களிலும் கவனமாக இருக்கவும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். பெண்களால் சில தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு. சுற்றி இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை தீபம் ஏற்றி வழிபடவும்.


தமிழ் மாத ராசி பலன்கள் – நவம்பர் 2025
(01.11.2025 முதல் 30.11.2025) விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 15ம் தேதி முதல் கார்த்திகை மாதம் 14ம் தேதி வரை

வாக்கிய பஞ்சாங்கப்படி 01-11-2025 முதல் 30-11-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.


இந்த மாதம் கிரக நிலை மாற்றம் :

02.11.2025 – துலாம் – சுக்கிரன்
04.11.2025 – தனுசு – செவ்வாய்
10.11.2025 – புதன் (வ)
11.11.2025 – குரு (வ)
16.11.2025 – விருச்சிக – சூரியன்
26.11.2025 – விருச்சிக – சுக்கிரன்

ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர்
ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார் Ph.d Astrology (அலைபேசி: 09003019831)

நவம்பர் மாத ராசி பலன்கள் (2025)

மேஷ ராசி அன்பர்களே

மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் சாதகமான மாற்றங்களைக் காண முடியும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது வரும். பயணங்களின்போது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் அனுசரித்து போவது நல்லது. வீடு வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுவும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். குடும்பத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வீண் செலவுகளை குறைக்க வேண்டியது அவசியம். மனதில் ஏற்படும் ஒரு சில குழப்பத்தினால் முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் பிரச்னைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களை சுற்றி இருந்த தடைகள் யாவும் நீங்கும். எந்த ஒரு காரியத்தையம் செய்யும் முன் நன்கு யோசிக்கவும். இந்த மாதம் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

சந்திராஷ்டமம் : 20,21,22 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.


ரிஷப ராசி அன்பர்களே

ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தை பொறுத்த வரை நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். இது வரை இருந்த தடைகள் சிக்கல்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிய முடியும். எந்தச் செலவையும் உங்களால் தவிர்க்க இயலாது. யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. எதிர்பாராத செலவினங்கள் உண்டு. உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கணவன், மனைவிடையே பனிப்போர் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி பயணங்கள் செல்ல நேரிடும். குடியிருக்கும் வீட்டை சீர் செய்ய வேண்டிவரும். குடும்பப் பிரச்னைகள் அவ்வப்போது இருக்கும். திருமண முயற்சிகளில், தடங்கல்களும், தாமதமும் ஏற்படும். வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உத்யோகத்தில் பல நல்ல பலன்கள் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் : 22,23,24,25 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


மிதுன ராசி அன்பர்களே

மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவ்வளது சாதகமாக இல்லை. குடும்ப வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். எதிர்பாராத பணவரவு உண்டு. நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.தேக நலனில் கூடுதல் அக்கறைகொள்ள வேண்டியவது அவசியம். வெளியிடங்களில் உங்களின் பேச்சு பல சிக்கல்களை சந்திக்க வைக்கும். இம்மாதம் முழுவதும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். உற்றார், உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எவ்வளவுதான் சிக்கனமாக இருக்க முயற்சித்தாலும், எந்தச் செலவையும் தவிர்க்க இயலாது. எதிர்பாராத பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் தடை இருக்கும். உற்றார், உறவினர்கள் உதவி கேட்டு வருவர். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் உருவாகும். ஒரு சிலருக்கு பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறு வேண்டிவரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வண்டி, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. இது வரை தடைபட்டு வந்த காரியம் மெல்ல கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

சந்திராஷ்டமம் : 25,26,27 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


கடக ராசி அன்பர்களே

கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தினரின் ஆதரவை பெற முடியும். நீங்கள் சற்றும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். சுற்று வட்டாரத்தில் உங்கள் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். குடும்பத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கும். பேச்சில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மனோபலம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். வரவிற்குமீறிய செலவுகளையும் இம்மாதம் சமாளிக்க வேண்டியிருக்கும். திருமண முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் பொது மிகுந்த கவனம் தேவை. யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். வர வேண்டிய பணம் சரியான நேரத்தில் கைக்கு வரும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பிரியமானவர்கள் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனை பல நேரங்களில் கைகொடுக்கும். புது வாகனம் வாங்குவது குறித்து யோசனை வரும். புது வேலை முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : 27,28,29 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்



சிம்ம ராசி அன்பர்களே

சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். நீண்ட நாட்கள் தடைபட்ட விஷயங்கள் இந்த மாதம் சாதகமாக முடியும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகளும், தாமதங்களும் ஏற்படும். பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத அதிர்ஷ்டமும், திடீர் பணவரவும் உண்டு. குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். வாக்கு சாதுரியம் உண்டாகும். உடல் உஷ்ண சம்பந்தமான தொந்தரவுகள் இருக்கும். பண சேமிப்பிற்கு வாய்ப்பு குறைவு. குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் உங்களை பின் தொடரும். மனக்குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். புது மனை, வீடு வாங்கும் யோகம் உண்டு. புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து இருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவிக்கிடையே சின்ன மனஸ்தாபம் வரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். மாத இறுதியில் குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் ஒரு சில இடையூறுகள் வரும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.

சந்திராஷ்டமம் : 2,3,4 & 30 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


கன்னி ராசி அன்பர்களே

கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும். பல சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பொருளாதார நிலை நிலைமை சிறப்பாகவே இருக்கும். ஒவ்வொரு நாளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் விடா முயற்சியால் வெற்றி பெற முடியும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். பல அலைச்சலுக்கு பின் தான் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கையில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். கணவன் மனைவியிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது புதிய முயற்சிகள் எதுவானாலும் வெற்றியடைய வாய்ப்புண்டு. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிர்பார்ப்புகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அது நிறைவேறும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் சில தாமதங்கள் உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில்

சந்திராஷ்டமம் : 4,5,6 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


துலாம் ராசி அன்பர்களே

துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் பொருளாதார நிலைமை சாதாரணமாக இருக்கும். மனதில் நினைத்த காரியத்தை உடனே செய்து முடிக்க முடியும். எதிர்காலம் பற்றிய கவலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இம்மாதத்தில் உணர்ச்சிபூர்வமாக பல முடிவுகளை எடுக்க நேரிடும். விலகி நின்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். உடல் நலம் சீராக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தில் திட்டமிட்டு செலவு செய்யாவிட்டால் புதிய கடன்களை வாங்க வேண்டிய அவசியம் வரும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களால் கருத்துவேற்றுமையும் குடும்பத்தில் ஒற்றுமையை பாதிக்கும். முடிந்த வரை தூர பயணங்களை இம்மாதத்தில் தவிர்ப்பது நன்மை செய்யும். வீடு மாறுவது குறித்த யோசனை வரும். எதிர்பாராத பணம் கைக்கு வந்தவுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.

சந்திராஷ்டமம் : 6,7,8 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


விருச்சிக ராசி அன்பர்களே

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல ஆதாயமான விஷயங்களை எதிர்பார்க்கலாம். குடும்ப வருமானம் சொல்லும்படி இருக்கும். வேண்டியவர்கள் யாருக்கும் பண உதவி செய்ய வேண்டாம். விடாமுயற்சியால் எதிலும் வெற்றி பெற முடியும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாகவே அமையும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகம் தொடர்பான செலவினங்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சின்ன சின்ன தொந்தரவுகள் இருந்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் பல சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. ஆன்மீக எண்ணம் மேலோங்கும். இந்த மாதம் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். முயற்சி செய்யும் காரியங்கள் முன்னேற்றமடையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பண வரவில் தாமதம் ஏற்படும். மருத்துவ செலவுகள் வந்து போகும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

சந்திராஷ்டமம் : 8,9,10 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


தனுசு ராசி அன்பர்களே

தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் பல வேலைகளை தனியாளாக நின்று முடிக்க வேண்டிவரும். எந்த ஒரு சிக்கல் வந்தாலும் அதை சமாளிக்கும் சாமர்த்தியம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று வரும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. புதிய முயற்சியிகளில் வெற்றிக்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லதும். பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமாக கையாளுவும். நண்பர்களால் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. பிறருக்குக் கடன் கொடுப்பதைக் கண்டிப்பாக தவிர்க்கவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வேண்டியவர்களுடன் சிறு சிறு கருத்துகள் வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சிலருக்கு வீடு மாற்றம் செய்ய வேண்டி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


மகர ராசி அன்பர்களே

மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகளும் காத்து கொண்டு இருக்கும். உங்களுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். எத்தனை தடைகள், பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். எந்த சூழ்நிலையையும் திறமையாக கையாள முடியும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் வரும். குடும்ப சுமைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப விரயங்களும் வீண் விரயங்களும் உண்டு. இம்மாதத்தின் இறுதியில் மருத்துவச் செலவுகளால் பணம் விரயமாகும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

சந்திராஷ்டமம் : 12,13,14,15 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


கும்ப ராசி அன்பர்களே

கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நனவாகும். ஆரோக்கிய பிரச்சனைகளை சமாளிக்க சற்று போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தால் பிரச்சனைகள் இருக்காது. மேலும் புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். குடும்ப விஷயங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உடம்பு தொந்தரவுகள் வராமல் இருக்க ஒரு முறை குடும்ப மருத்துவரை அணுகி முழு உடற் பரிசோதனையை செய்து கொள்ளவும். உங்களுடைய காரியங்களில் ஒரு சில தடை ஏற்பட வாய்ப்புண்டு, இருப்பினும் எல்லாம் தற்காலிகமானது தான் என்பதை நினைவில் கொள்ளக. வண்டி வாகனங்களுக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இந்த மாதம் பல ஏற்றமான விஷயங்கள் நடக்கும். மாத தொடக்கத்திலிருந்தே அவசியமில்லாத செலவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யவும். பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. பல நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும். வரும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி நடை போட முடியும். தேவையில்லாத காரியங்களில் தலையிட்டு சிக்கலில் சிக்கி கொள்ள வேண்டாம். உத்யோக பணிகளில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : 15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


மீன ராசி அன்பர்களே

மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டியது வரும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் வந்து சேரும். மனதில் நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்ளவும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தேக நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுக்கவும். பண விவகாரத்தில் கறாராக இருக்கவும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை உறுதியாக எதிர்பார்க்கலாம். வீண் செலவுகளால் பணம் விரயமாகும். திருமண முயற்சிகள் கைகூடும். ஒரு சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படக்கூடும். வீடு, மனை, வாங்கும் யோகங்களும் கூடி வரும். இதுவரை முடியாமல் இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்ந்து மனம் நிம்மதியடையும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். பிரியமானவர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் அரவணைப்பு கிட்டும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். புது தொழில் யோகம் அமையும்.

சந்திராஷ்டமம் : 17,18,19.20 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்


Leave a Reply