முழுமையான விடுதலைக்காய்…. முடிவான பாதையில்…. வெல்க தமிழீழம்

20-01-1984 | தமிழீழம்

“அதிகளவு சுதந்திரமும்”, ‘மனிதநேயமும்’, ‘ஜனநாயகமும்’ காப்பாற்றப்படுவதாக உலகத்தோர் நம்பும் இங்கிலாந்தின் ஆதிக்கத்திற்கு எதிராக ஐரிஷ் மக்கள் ஆயுதம் தாங்கிப் பல்லாண்டு காலமாகப் போராடி வருகின்றனர். சென்ற சில ஆண்டுகளுக்கு முன் பொபிசாண் ட்ஸ் உட்பட ஆறு ஜரிஷ் விடுதலை வீரர்கள் இங்கிலாந்து சிறையில் சாகும்வரை உண்ணா விரதம் இருந்தபோது அவர்களது கோரிக்கைகளை ஏற்காமல், தட்சர் அரசு விடுதலை வீரர்களை ‘1984 ம் ஆண்டு இனப்படுகொலையாளி ஜெயவர்தனேவிடமிருந்து தமிழ் மாணவர்களை காப்பாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் ‘பயங்கரவாதி”களாக வர்ணித்து இரக்கமற்ற முறையில் அவர்களை இறக்கவிட்டது. 

அவ்வாறிருக்க, இன்று உலக நாடுகளால் • நவீன ஹிட்லர்’ என வர்ணிக்கப்படும் ஜெயவர்த்தனாவின் இனவெறியரசு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு செவிமடுத்து மாணவர்களின் உரிமையை வழங்கும் என்பது அறியாத்தனமாகும். மாணவர்களின் இந்த உண்ணாவிரதப் போராட்டமானது ஆயுதப் போராட்டமே சரியான வழியென்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

ஏன் மாணவர்களை அழைத்துச் சென்றோம்?

நாம் ஏற்கெனவே உண்ணா விரதம் பற்றிய எமது நிலைப்பாட்டை மக்களுக்குத் தெளி வாக விளக்கியிருந்தோம். தமிழீழமே தமிழ்  மாணவர்  விடிவுபெற வழி சமைக்குமென்றும் காலங்காலமாகத் தோல்வியுற்ற அகிம்சைப் போராட்டங்கள் பயனற்றவை யென்றும் தற்போதைய சூழலில் ஆயுதந்தாங்கிய போராட்டத்திற் பூக்களைத் தயார்படுத்தலே , அவசியமான தென்றும், மாணவர்களது கடமையும் தமிழீழ விடுதலைக்கு தங்கள் பங்களிப்பை நல்குவது தான் என்றும் கோரிக்கை விடுத்தோம். 

நாம்    எதிர்ப்பார்த்தது போலவே சிங்கள அரசு அகிம்சை வழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்க திட்டங்களை தீட்டியது அகன் முதற்கட்டமாக பல்கலைக்கழகத்தை மூட உத்தரவிட்டது. அதன் அடுத்த கட்டமாக, உண்ணாவிரதிகளை பலாத்காரமாக கடத்த  தருணம் பார்த்துக் கொண்டிருந்தது. உண்ணாவிரதிகளில் ஒருவரோ மரணத்துடன் போராடிக்கொண்டிருந்தார், வைத்தியர் வந்து பார்த்து அபாய நிலையிலுள்ளார் எனவும் உடன் வைத்தியசாலைக்கு அனுமதிக்குமாறும் இல்லையேல் பயன் தராது எனவும் அறிவித்தார். மற்றைய உண்ணாவிரதிகளும் கவலைக்கிடமான நிலையில், மக்களோ இவர்களை அநியாயமாகப் பலி கொடுக்கக் கூடாது என விரும்பினார்கள் கடந்த இனப் படுகொலையில் எண்ணற்ற தமிழர்களை இழந்த நாம் அநியாயமாக  ஒன்பது உயிர்களை சாக விடுவதா? அதுவும் உரிமைக்காக தம்முயிரைத் தியாகம் செய்ய விழைந்தவர்களைப் பலிகொடுப்பதா என எண்ணினோம். அரசுப்படைகள் அவர்களைத் தூக்கிச் சென்று ஏற்கெனவே வெலிக்கடையில் கொன்றது போல் சாகடிக்கும் முன்னர், மக்களின் முன்னணிப் படையாகிய நாம் உண்ணாவிரதிகளை அழைத்துச் சென்று காப்பாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் எமது இயக்கம் உண்ணாவிரதிகளை அவர்களின் பூரண சம்மதத்துடன் அழைத்துச் சென்றது. இன்று அவர்கள் எமது வேண்டுகோளுக்கு இணங்கி உணவு அருந்தி  உடல் நிலைதேறி வருகின்றனர்.

நாம் ஆயுதந் தாங்கி வந்தது மக்களையோ மாணவர்களையோ தாக்க அல்ல எதிரிகளிடமிருந்து எம்மையும் உண்ணாவிரதிகளையும் காக்வே. இதை விளங்காத சில ஞானசூனியங்கள் நாம் அவர்களை ஆயுதமுனையில் கடத்திச் சென்ற தாகவும்,  பொய்ப்பிரச்சாரம் செய்தும் எமது இயக்கத்தைக் களங்கப்படுத்துவதுடன் மக்களையும் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பொய்ப்பிரச்சார முகமூடியைக் கிழித்து உண்மையை மக்கள் உணர்வார்கள் என்பது உறுதி. மாணவர்கட்கு சரியான வழியைக் காட்டுவதை விடுத்து இயக்கங்கள் ‘ சில உரிமை கிடைக்கும் வரை போராடு’ என்று இனவாத  அரசிடம் உரிமைகளை எதிர்பார்க்கச் சொல்லி கோசங்களை இடுவதும் சுவரொட்டிகளை ஒட்டுவதும் ‘ உண்ணாவிரதத்தை ஆதரிக்கின்றோம்’ என்று . கடந்தகால வரலாற்றை திரும்பிப் பார்க்கமல் அவற்றின் படிப்பினைகளை உணராமல் கூறுவதும் மாணவர்களைப் பலியாக்கும் முயற்ச்சியாகும். 

இதனை மக்களும், மாணவர்களும் நன்குணர்ந்து விடுதலைக்கான  பாதையில் அணிதிரள்வார்கள் என்பது உறுதி.

வெல்க தமிழீழம்

வெளியீடு:- பிரச்சார வெளியீட்டு வாரியம், தமிழீழ விடுதலைப் புலிகள் 

Leave a Reply