யாழ்ப்பாணம் கலட்டிச் சந்தியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம், தமிழீழம்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (09.09.2025) காலை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

ஹையேஸ் ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று, மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவனை மோதி விழுத்திவிட்டு அந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்நிலையில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்