Tuesday, March 31, 2026

குருநகரில் நீண்டகாலமாக ஹெராயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 120 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிசாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00