Tuesday, March 31, 2026

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 05 மீனவர்களையும் தொடர்ந்து காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 comments

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் வெள்ளிக்கிழமை [19.09.2025] வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் மாதம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகுகளையும் ஒன்றையும் அதிலிருந்து 5 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

பின்னர் குறித்த மீனவர்களையும்,இலுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் வெள்ளிக்கிழமை (19.09.2025) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 5 மீனவர்களையும் இம் மாதம் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00