Monday, March 30, 2026

உலக சமாதான தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற சமாதானத்திற்கான நடைப்பவனி.

0 comments

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு சமாதானம் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் உலக சமாதான தினத்தை முன்னிட்டு நடைபவனி ஒன்று அவர்களால் திட்டமிடப்பட்டது.

குறித்த நடைபவனியானது உலக சமாதான தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (20.09.2025) காலை 9.00 மணியளவில் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் ஆரம்பமாகி கிளிநொச்சி பேருந்து நிலையம் வரை சென்றது.

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்கள், சமாதானத்தை வலியுறுத்திய வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவண்ணம் நடப்பயணத்தில் ஈடுபட்டனர்.

இவ் நடப்பயணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், மத குருமார்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00