Wednesday, April 1, 2026

குடும்பத் தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 comments

குறிஞ்சிப்பாடி அடுத்த அன்னதானம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், 52; இவரது மனைவி தேவி.

கடந்த, 30ம் தேதி, தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சிவகுமார் களைக்கொல்லி மருந்தை குடித்து ஆபத்தான நிலையில் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார்.

குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00