பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வந்தடைந்தார்

இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக, பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவரை முதல்வர் பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் இன்று (அக் 08) இந்தியா வந்தடைந்தார். இது இந்தியாவிற்கு அவரது முதல் அதிகாரப்பூர்வ பயணம் ஆகும். மும்பை விமான நிலையத்தில் அவரை முதல்வர் பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அப்போது பிரிட்டன் பிரதமர், பட்னவிஸ் ஆகியோர் சிறிது நேரம் நலம் விசாரித்தனர். பிரதமர் மோடியை பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ​​வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.

நாளை அக்டோபர் 9ம் தேதி மும்பையில், மோடியும், ஸ்டார்மரும் தொழில்துறைத் தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளனர். இந்தியா- இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆக வாய்ப்புள்ளது.

இந்த உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழாவில் கலந்து கொண்டு, பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் ஆகிய இருவரும் முக்கிய உரைகளை நிகழ்த்தி இருப்பதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு