வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக வழங்கப்பட்டது.

உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1901ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது.

இவ்விருது ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10 ல் வழங்கப்படும்.நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன், ரூ.10.41 கோடி வழங்கப்பட இருக்கிறது.

ஏற்கனவே, மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேதியியலுக்கான பரிசு பெறுபவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல் துறைகளைப் போன்றே, வேதியியலுக்கான விருதும், 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட இருக்கிறது.

ஜப்பானின் சுசுமு கிடகாவா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவைச் சேர்ந்த ஒமர் எம்.யாகிக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (அக்.,9) இலக்கியத்திற்கும், அக்.,10 அமைதிக்கும், அக்., 13 பொருளாதாரத்திற்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

Related posts

ரஷ்யாவின் இறுதி எச்சரிக்கை, நேட்டோவின் பிளவுகள் மற்றும் டிரம்பின் புதிய புவிசார் அரசியல் அதிர்வுகள்

பூமிக்குள் புதைந்த வரலாறு: ஐபீரிய குகைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான மனித DNA கண்டுபிடிப்பு

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து; கச்சா எண்ணெய் விலையில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்குக் சரிவு.