Tuesday, March 31, 2026

நவம்பர் 1ம் தேதி சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

0 comments

நவம்பர் 1ம் தேதி சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். நோபல் பரிசு கிடைக்காத நிலையில் அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் தொடங்கினார். அவர் மீண்டும் வர்த்தகப்போரை தீவிரப்படுத்தி உள்ளார்.

இது குறித்து, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நவம்பர் 1ம் தேதி முதல், தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக, உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் சீனா வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. அதிக வரி விதித்தால் அமெரிக்காவில் மின்சாதனங்களின் தயாரிப்பு பாதிக்கும் அபாயம் இருக்கிறது.

இந்த திட்டம் பல ஆண்டுகளுக்கு முன் அவர்களால் வகுக்கப்பட்டு உள்ளன. இது சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, பிற நாடுகளுடன் கையாள்வதில் ஒரு தார்மீக அவமானம். சீனா இந்த முன்னோடியில்லாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல், சீனாவுக்கு மேலும் 100 சதவீத வரி விதிக்கப்படும். அனைத்து முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம். வர்த்தகத்தில் நியாயமற்ற நடைமுறைகளை சீனா கையாள்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஏற்கனவே 30 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், நவம்பர் 1ம் தேதி முதல் சீனாவுக்கு வரி 130 சதவீதமாக உயருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன்

2025ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ, ”எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவின்

துன்பப்படும் மக்களுக்கும், எனக்கு தொடர்ந்துஉறுதியான ஆதரவை அளித்து வரும் அதிபர் டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன்” என தெரிவித்தார்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00