Home தமிழகம்நவம்பர் 15 ஆம் தேதி கல்லணைக்கு அருகில் உள்ள பூதலூர் பகுதியில் “தண்ணீர் மாநாடு” – தமிழம் செந்தில்நாதன்

நவம்பர் 15 ஆம் தேதி கல்லணைக்கு அருகில் உள்ள பூதலூர் பகுதியில் “தண்ணீர் மாநாடு” – தமிழம் செந்தில்நாதன்

by Amizhthu
0 comments

வர இருக்கின்ற நவம்பர் 15 ஆம் தேதி அண்ணன் சீமான் அவர்களின் வழிக்காட்டலின் படி “தண்ணீர் மாநாடு”, தஞ்சை மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் கல்லணைக்கு அருகில் உள்ள பூதலூர் பகுதியில் நடைபெற இருக்கிறது.

தண்ணீர் உயிரின் கரு முதல் கல்லறை வரை தொடருகின்ற ஒரு பந்தம். தண்ணீர் தான் பருபொருளின் கட்டமைப்பு. நீர்மை இல்லா சூரியன் வெடித்து சிதறும், நீர்மையில் பூமி சாம்பலாய் போகும் நீர்மை இல்லா எதுவும் இங்கே இல்லை எனலாம். அந்த அளவிற்கு முக்கியமான தண்ணீர் தமிழர்கள் வரலாற்றின் படி எதிர்கொண்ட விதத்தை குறித்த மாநாடு இது.

இந்த மாநாடு பெரிய அளவில் திட்டமிட்டு பணிகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்வில் உங்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பது விருப்பம் என்பதை தாண்டி அவசியம் என்றாகிறது. தமிழ்த்தேசிய பெருங்களத்தில் தொடர்ச்சியாக களப்பணியில் இருக்கும் நம்மால் தனிப்பட்ட முறையில் பொருளாதார செலவுகளை எதிர்கொள்வது ஆகாத காரியம்.

banner

இந்த நிகழ்வு மிக சிறப்பாக நடந்து முடிந்திட உங்களின் பங்களிப்பை வேண்டி நிற்கின்றேன். பங்களிப்பு செய்ய விரும்பும் உறவுகள் தொடர்புக்கு வாருங்கள் !

ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி !
உயிர்கள் அனைத்திற்கும் பகிர்ந்தளி !
நீரின்றி அமையாது உலகு !
நினைவில் நிறுத்தி பழகு!

தமிழ்த்தேசிய முன்னெடுப்பின் மிக முக்கியமான நிகழ்வான மாநாடு வெற்றியடைய தங்களால் இயன்றதை உதவ வேண்டுகிறேன் !

அன்புடன்
தமிழம் செந்தில்நாதன்
பகிரி : 9442248351

You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00