Wednesday, April 1, 2026

எள்ளாங்குளம் துயிலுயில்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

0 comments

வடமராட்சி பகுதியில் அமைந்துள்ள  எள்ளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற உள்ள மாவீரர் நாள் நிகழ்வினை முன்னிட்டு தாயகத்தில்  சிரமதானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கார்த்திகை நாளில் காவிய நாயகர்களை நினைவு கூர தயாராகின்றது எள்ளாங்குளம்  மாவீரர்  துயிலுமில்லம்

மண்ணின், வருங்கால சந்ததியின், தாய்த்தமிழின் இருப்புக்காய் தமது இன்னுயிர்களை உவந்தளித்து  ,தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்களை  ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி  விடுதலை உணர்வோடு  தமிழினம் வணங்குகின்றது.

அந்த வகையில் [01.11.2025 ] எள்ளாங்குளம் மாவீரர்  பணிக்குழுவினால் முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த சிரமதானப் பணிகளில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00