சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில், கடற்படையின் ரோந்து கப்பல்கள் இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான மூன்று இயந்திரப் படகுகளை இடைமறித்தபோது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மூன்று படகுகளும் மீன்பிடி உபகரணங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 31 மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள நான்கு மீனவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்தவுடன், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

Related posts

அகவை வாழ்த்து | 15 பிப்ரவரி

நினைவு வணக்கம் | 15 பிப்ரவரி

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை