வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02.11.2025) மாலை இடம்பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாகனம் மன்னார் வீதியில் பயணித்த போது வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் வாகனத்தில் மின்சார சீரின்மை காரணமாக தீப் பரம்பல் ஏற்பட்டது.

இதனையடுத்து வாகன சாரதியும், அப் பகுதியில் நின்றவர்களும் துரிதமாக செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இச் சம்பவத்தின் போது வாகனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்.

கெப்பாபுலவில் தங்கள் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஈழத் தமிழரும், இந்திய வம்சாவளி தமிழரும், ஒன்று சேர்ந்தால்தான் இலங்கை தமிழர்