DNA கட்டமைப்பைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் தனது 97 ஆவது வயதில் காலமானார்.

இது 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்தது.

DNAயின் இரட்டைச் சுருள் கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சனுக்கு 1962 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் கிடைத்தது.

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோவில் பிறந்தார்.

ஜேம்ஸ் வாட்சன் தனது 15 வயதில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் படிக்க புலமைப்பரிசில் பெற்றார்.

DNA கட்டமைப்பு குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர ஜேம்ஸ் வாட்சன் கேம்பிரிட்ஜுக்குச் சென்றார், அங்கு அவர் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக்கை சந்தித்து தனது கண்டுபிடிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

விளிம்பில் செங்கடல்: ஈரான்–அமெரிக்க பதற்றம் அதிகரிப்பால் உலகளாவிய கப்பல் போக்குவரத்து ஆபத்தில்

பிராந்தியப் போர் வெடிப்பு: ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டணிகள் பல முனைப் மோதலில்