வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகமானது தமது பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக அழித்தொழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை (08.11.2025) சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கட்டைக்காடு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் முற்றுகையிடப்பட்டது.

இந்த முற்றுகையின் போது அங்கு கூடியிருந்தவர்கள் கசிப்பு பீப்பாய்களை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், கைப்பற்றிய கசிப்புகளை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தினர் எரித்து அழித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவரும் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினருமான பி.அலஸ்ரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. கழகத்தின் முன்மாதிரியான குறித்த செயற்பாட்டை பலரும் பாராட்டினர்.

Related posts

மனித வாழ்க்கை – இரண்டாம் நாள்

ஈழப் போர்: நாம் அறியாத உண்மைகளும்-ஆதாரங்களும்!

மனித வாழ்வின் முதல் நாள்