மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் கைது.

மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (13.11.2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி – உத்தராகன்த பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு கொம்பனிவீதி ரயில் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் ஆவார்.

இது தொடர்பில் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!