Wednesday, April 1, 2026

“இந்தியா சர்ச்சைகளில் ஈடுபடுவதில்லை” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

0 comments

இந்திய பாரம்பரியம் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறது. “இந்தியா சர்ச்சைகளில் ஈடுபடுவதில்லை” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில், மோகன் பகவத் பேசியதாவது: இந்தியாவின் தேசியம் பற்றிய நிலைப்பாடு, மேற்கத்திய நாடுகளின் அடிப்படையில் இருந்து வேறுபட்டது. எங்களுக்கு யாருடனும் எந்த வாக்குவாதமும் இல்லை. நாங்கள் தகராறு செய்வதில் இருந்து விலகி இருக்கிறோம். இந்திய பாரம்பரியம் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறது.

தகராறு செய்வதில் இந்தியா ஈடுபடுவது கிடையாது. தேசியம் என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்துகிறோம். தேசியவாதம் அல்ல. சில சூழ்நிலைகள் தான், இரண்டு உலகப் போர்களுக்கு வழிவகுத்தது. அதனால் தான் சிலர் தேசியவாதம் என்ற வார்த்தைக்கு அஞ்சுகிறார்கள். உண்மையான திருப்தி, மற்றவர்களுக்கு உதவுவதிலிருந்து வருகிறது. இவ்வாறு மோகன் பகவத் கூறியுள்ளார்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00