இலங்கை, மொரகஹஹேன பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது.

பாணந்துறை பிரதேச குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் நேற்று (04-12-2025) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 1062 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தம்பர மில்லேவ பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மொரகஹஹேன பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!