Thursday, April 2, 2026

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது!

0 comments

நேற்று (16-12-2025) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வைத்து 30 வயதுடைய இளைஞர் ஒருவர் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ். போதைத் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00