தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் தளபதிகள் மட்டுமன்றி, தமிழீழ மக்கள் அனைவராலும் அன்புடன் “பாலா அண்ணா” என அழைக்கப்பட்டவரும், சர்வதேச அரசியல் அரங்கில் சிறந்த ராஜதந்திரியாகவும், அரசியல் சாணக்கியராகவும், எமது தேசியத் தலைவரின் அரசியல் ஆலோசகராகவும் விளங்கிய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அலுவலகத்தில் 14.012.2025 மாலை 5 மணிக்கு நினைவுகூரப்பட்டது.