கம்பஹா – கொய்கம சந்தி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது

கம்பஹா – கொய்கம சந்தி பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04-01-2026) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 51 கிராம் 700 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!