Sunday, April 5, 2026

08.01.1984 அன்று தமிழ் இளைஞர்களை நேரக்கணிப்பு குண்டினால் படுகொலை செய்த சிங்கள காவல்துறையினர்!

0 comments

சுன்னாகம் காவற்துறை நிலையைப் படுகொலை – 08.01.1984

வட தமிழீழம் , யாழ் மாவடத்தின் தெற்கு உடுவில் பிரதேச  எல்லைக்குள் சுன்னாகம் அமைந்துள்ளது .யாழ் நகரிலிருந்து  காங்கேசன்துறை செல்லும் கே கே எஸ் வீதியில் பத்து கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சந்திக்குத் தெற்குப்புறமாக இருநூற்றைம்பது மீற்றர் தூரத்தில் சுன்னாகம் காவற்றுறை நியாயம் அமைந்திருந்தது

1984 ஆம் ஆண்டு  சனவரி மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் காரணமின்றிக் கைது செய்யப்பட்ட சுன்னாகப் பகுதியை சேர்ந்த   இளைஞர்கள் சுன்னாகக் காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் .

1984 சனவரி  மாதம் எட்டாம் நாள் காவல்துறை மீது போராளிகளின் எதிர்ப்புக்கள் பரவலைடைய சுன்னாகக் காவல்துறையினர் ,இளைஞர்களைத் தடுத்து வைத்திருந்த அறையில் நேரக்கணிப்பு குண்டினை  பொறுத்திவிட்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறினார்கள் .காவல்துறையினர் பொருத்திய குண்டு  வெடித்ததில் காவல்துறை நிலையில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர்களை காப்பாற்ற சென்ற சஞ்சீவன் உட்பட பத்தொன்பது இளைஞர்கள் உயிரிழந்தனர்.

காச சுன்னாகம் காவற்துறை நிலையைப் படுகொலை 08.01.1984

08.01.1984 அன்று சுன்னாகம் காவற்றுறை நிலையப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்.

  1. செல்லர் சிவலிங்கம்
  2. வைத்திலிங்கம் நிகேதனன் 03.கந்தையா பாலன்
  3. அப்பையா நாகராசா
  4. ஆசீர்வாதம் விஜிற்விமலராஜா

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00