கண்டியில் யாசகப் பெண் கொடூரமாக கொலை!

கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23-01-2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான இளைஞன் கண்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கண்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார்.

யாசகப் பெண்ணுக்கும் இளைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!