யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது!

அனுமதிப் பத்திரமன்றி சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் செவ்வாய்க்கிழமை (27-01-2026) கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கையானது சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் வைத்து சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஒரு டிப்பர் வாகனம் தப்பித்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மணல் கிளாலி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட போதே இவ்வாறு கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு