இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்

புதுடெல்லி, இந்தியா, 01 பிப்ரவரி 2026

*ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விடுதிகள்
*நிதி பற்றாக்குறை 4.3 சதவீதமாக குறைக்கப்படும்
*முந்திரி கோகோ உற்பத்தியை ஊக்குவிக்க பிரத்யேக திட்டம்
*கிராம பெண்களை தொழில்முனைவோராக்க சிறப்பு திட்டம்
*உயிர்காக்கும் அரிய வகை மருந்துகள் இறக்குமதிக்கு கலால் வரி விலக்கு
*சூரிய ஒளி மின்தகடு தயாரிக்க உதவும் சோடியம் ஆன்டிமோனேட்டிற்கான சுங்கவரி ரத்து
*புற்றுநோய் உள்ளிட்ட 17 வரை அரிய நோய்களுக்கான மருந்து இறக்குமதிக்கான கலால் வரி விலக்கு
*ஏற்றுமதிக்கான கலால் வரி குறைப்பு
*சர்வதேச கடல் பகுதியில் பிடிக்கப்படும் மீன்களுக்கு இறக்குமதி வரி கிடையாது
*டேட்டா சென்டர்களுக்கு 2047 வரை முழு வரிவிலக்கு
*மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விகிதத்தில் மாற்றம் இல்லை.
*மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41 சதவீதமாக தொடரும்
*மருத்துவ கல்வி கடனுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு
*நாட்டில் 5 பல்கலை நகரங்கள் உருவாக்கப்படும்
*உயிரி மருந்து உற்பத்தி மையமாக இந்தியா மாற்றப்படும்.
*கனிம வளங்களை எடுக்க புதிய திட்டம் தமிழகம் ஆந்திராவில் செயல்படுத்தப்படும்
*புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்
*தமிழகம், கேரளா, ஒடிஷாவில் அரியவகை கனிமங்கள் உற்பத்திக்கு என தனி வழித்தட திட்டம்
*கட்டுமான துறை வளர்ச்சிக்கு தேவையான இயந்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம்
*சர்வதேச அளவில் ஜவுளித்துறையில் இந்தியா போட்டியிட புதிய திட்டம்
*ஜவுளித்துறை சார்ந்த திறன்களை வளரத்தெடுக்க தொழிற்துறை, கல்வித்துறை இடையே ஒருங்கிணைப்பு
*இயற்கை நூல் உற்பத்திக்கு புதிய திட்டம்
விளையாட்டுகளில் பயன்படுத்தப்டும் பொருட்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்
*மத்திய அரசின் நிலம், கடட்டங்களை போன்ற அசையா சொத்துகளை நிதியாக்கும் திட்டம் தொடரும்
*புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்
*அரியவகை காந்தங்கள் உற்பத்திக்கு என வழித்தட திட்டம்
*அனிமேஷன் துறையில் இந்தியா வளர்ந்து வருகிறது; 2030க்குள் 20 லட்சம் பணியாளர்கள் இத்துறையில் தேவைப்படுவார்கள். மும்பையில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள 15 ஆயிரம் பள்ளிகள், 500 கல்லூரிகளில் அனிமேஷன் கன்டன்ட் கிரியேட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்படும்
*மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கு இறக்குமதி வரி கிடையாது
*7 அரியவகைநோய்களுக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு
*மைக்ரோவேவ் ஓவன்களுக்கு சுங்கவரி விலக்கு
*விமான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைவு
*மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ஜிடிபியில் 4.4 சதவீதமாக உள்ளது
*2027ல் நிதி பற்றாக்குறை 4.3 சதவீதமாக இருக்கும்
*என்.ஆர்.ஐ.,க்கள் தங்களின் சொத்துகளை விற்கும்போது அதன் டிடிஎஸ் விகிதங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன
*காலணிகள் ஏற்றுமதிக்கான மூலப்பொருட்களை வரியில்லாமல் இறக்குமதி செய்ய சலுகைகள் அறிவிப்பு
*வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பணம் அனுப்புவதற்கான வரி குறைப்பு
*கடந்த, 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பல்பரிமாண வறுமையிலிருந்து மீண்டு வந்துள்ளனர்
*16வது நிதிக்குழு முடிவை நாங்கள் ஏற்றுள்ளோம்
*மாநிலங்களுக்கு 1.4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது
*16வது நிதிக்குழு 41 சதவீத வரிப்பகிர்வை மாநிலங்களுக்கு வழங்க பரிந்துரைத்துள்ளது
நிதி ஒதுக்கீடு
*உயிரி மருந்து திட்டத்திற்கு: ரூ.10 ஆயிரம் கோடி
*மின்னணு பொருட்கள் உற்பத்திக்கு: ரூ.40 ஆயிரம் கோடி
*மூலதன செலவு: ரூ. 12.2 லட்சம் கோடி
*அனைத்து பிராந்திய துறைமுகங்களை இணைக்க: ரூ.20 ஆயிரம் கோடி
*கன்டெய்னர் உற்பத்தி துறையை ஊக்குவிக்க: ரூ.10 ஆயிரம் கோடி
*சிறுகுறு நடுத்தர தொழில்துறைக்கு: ரூ.10 ஆயிரம் கோடி
*நீர்வழித்துறை மேம்பாடு ரூ.20 ஆயிரம் கோடி
*குறு நிறுவன மேம்பாட்டு நிதி ரூ.2 ஆயிரம் கோடி
*குறு நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி
*நகரங்களை ஒட்டி உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி
*2ம், 3ம் நிலை நகரங்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.12.2 லட்சம் கோடி
*காதித்துறை – ரூ.10 ஆயிரம் கோடி
*உயிரி தயாரிப்பு மருந்துகள் -ரூ.10 ஆயிரம் கோடி
*கார்பன் உமிழ்வை குறைக்க 4 துறைகளில் ரூ.20 ஆயிரம் கோடி

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்