இலங்கை: காலி சிறைச்சாலையில் திடீர் சோதனை; சட்டவிரோத பொருட்கள் பறிமுதல்!

காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கைதிகளிடம் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல சட்டவிரோத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது மொத்தமாக 19 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. இதனுடன், 4 கிராம் 384 மில்லிகிராம் எடையுடைய 58 ஹெரோயின் பொட்டலங்களும், 106 கிராம் 350 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு