Wednesday, April 1, 2026

இந்திய மீனவர்கள் தொடர்பான தெளிவுபடுத்தலுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

0 comments

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலுக்கு பின்னர் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்த்த நிலையில் புயல் பின்னர் அவர்களின் வருகை நிலையில் காணப்படுகின்றது வடமாகாண கடற்றொழில் இணையத்தின் செயலாளர் என்.எம் ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (12-02-2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் தொடக்கம் தெற்கு பகுதியாக இருக்கின்ற சௌத்பார்,வங்காலை,சிலாபத்துறை,முள்ளிக்குளம் அகிய கடற்பகுதிகளுக்கு தற்போது இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை அதிகரித்துள்ளது.

இந்திய மீனவர்கள் தொடர்பாக நாங்கள் அரசுக்கு பல்வேறு விடையங்களை தெளிவு படுத்தினாலும்,அரசாங்கம் குறித்த விடயத்தை கண்டு கொள்வதாக இல்லை.

டிட்வா புயலுக்கு பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்த்த நிலையில்,புயலின் பின்னர் அவர்களின் வருகை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.அரசாங்கம் அவர்களின் வருகையை கட்டுப்படுத்தாமல்,குறித்த விடயத்தை கண்டு கொள்ளாமல் அரசாங்கம் அசமந்தமாக இருக்கிறது.

வடபகுதியில் தடை செய்யப்பட்ட தொழில் முறைமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அண்மையில் தபாலட்டைகள் ஊடாக ஜனாதிபதிக்கும்,கடற்றொழில் அமைச்சருக்கும் கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம்.எமது மீனவர்கள் தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுகின்றனர்.எனவே குறித்த தொழில்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற காரணத்தை முன் வைத்தோம்.

தடை செய்யப்பட மீன் பிடி நடவடிக்கைகளினால் சிறு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.கரைவலை தொழிலும் பாதிக்கப்படுகின்றது.கடல் சூழலும் பாதிக்கப்படுகின்றது.

குறிப்பாக உள்ளூர் இழுவை படகு தொழில்,டைனமைட்,சுருக்கு வலை, உள்ளிட்ட தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகளையும் நாங்கள் சுட்டிக் காட்டினோம்.ஆனால் மீனவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த கூடிய கிராம மட்ட ரீதியில் மீனவர்களுக்கும் எமக்கும் உள்ள உறவை துண்டிக்கும் வகையில், அரசாங்கம் குறித்த தொழிலை மாத்திரம் நிறுத்த முடிவெடுத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

,குறித்த ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட உறுப்பினர் அன்ரனி சங்கர்,சிலாவத்துறை கிராமிய மீனவ அமைப்பின் தலைவர் முஹமட் அனாப்தீன் ஆகியோர் குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துக்களை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00