சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது.
சென்னை, தமிழ்நாடு – 14 பிப்ரவரி 2026

சென்னையில் இன்று (பிப்ரவரி 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) தங்கம் விலை கிராமுக்கு 190 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,520 ரூபாய் சரிவடைந்து, 1,16,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (பிப்ரவரி 13) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் சரிந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோவுக்கு 20 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் (பிப்ரவரி 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து 14,560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.