CFLI நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் இயலாமையுடன் கூடிய பெண்களுக்கான அவசர மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் CFLI நிறுவனத்தின் அமுலாக்கத்தில் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களிலும் தெரிவு செய்யப்பட்ட இயலாமையுடன் கூடிய 120 பெண் குடும்பங்களுக்கு தலா 35000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதன் முதல் நிகழ்வு கடந்த வருடம் 28.01.2025 இல் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கலாஞ்சலி டர்சன அருனசாந்த தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கனடா நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார்.
- வவுனியா வடக்கு நெடுங்கேணி – 40 இயலாமையுடன் கூடிய பெண்கள்
- வவுனியா நகர் – 30 இயலாமையுடன் கூடிய பெண்கள்
- வெண்கலச் செட்டிகுளம் – 30 இயலாமையுடன் கூடிய பெண்கள்
- வவுனியா தெற்கு – 20 இயலாமையுடன் கூடிய பெண்கள்
இயலாமையுடன் கூடிய 120 பெண் குடும்பங்கள் பயன் பெற்றனர்.