“எல்லைகளை காங்., திறந்து வைத்ததால் தான், அசாமில் ஊடுருவல் அதிகரித்தது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
எல்லை கிராமங்களை வலுப்படுத்தவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், 2023ல், மத்திய பா.ஜ., அரசால், ‘துடிப்பான கிராமங்கள் திட்டம்’ துவங்கப் பட்டது.
இதன் இரண்டாம் கட்ட விழா, வடகிழக்கு மாநிலமான அசாமின் சாச்சார் மாவட்டத்தில் நேற்று நடந்தது. மொத்தம் 15 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள, 1,954 கிராமங்களில் செயல்படுத்த உள்ள இத்திட்டத்தை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார்.
அவர் பேசிய தாவது:
எல்லையோர கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்வதை தடுக்கவும், சர்வதேச எல்லைகள் வழியாக நடக்கும் சட்ட விரோத ஊடுருவலை தடுக்கவும், துடிப்பான கிராமங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
உயர்தர வசதிகள் நாட்டின் எல்லைகளை காங்., திறந்து வைத்ததால் தான், அசாமில் ஊடுருவல் அதிகரித்தது.
முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., அரசு, இந்த பிரச்னையை திறம்பட கையாண்டு வருகிறது. இங்கு, முந்தைய காங்., ஆட்சியில் எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை.
தற்போது, ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எல்லையோர கிராமங்களில் உயர்தர சாலை வசதிகள் உருவாக்கப்படுகின்றன. 10 ஆண்டுகளில், அசாமை பா.ஜ., வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் சென்று உள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாத மாநிலமாக அசாம் மாறும். இவ்வாறு அவர் பேசினார்.