| தமிழ் நாட்காட்டி மார்ச் 2026 | |
|---|---|
| அமாவாசை | 18-மார்ச்-2026 புதன்கிழமை |
| பௌர்ணமி | 03-மார்ச்-2026 செவ்வாய்கிழமை |
| கார்த்திகை | 23-மார்ச்-2026 திங்கட்கிழமை |
| சஷ்டி விரதம் | 24-மார்ச்-2026 செவ்வாய்கிழமை |
| சங்கடஹர சதுர்த்தி | 06-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை |
| சதுர்த்தி | 22-மார்ச்-2026 ஞாயிறு |
| பிரதோஷம் | 01-மார்ச்-2026 ஞாயிறு 16-மார்ச்-2026 திங்கட்கிழமை 30-மார்ச்-2026 திங்கட்கிழமை |
| திருவோணம் | 15-மார்ச்-2026 ஞாயிறு |
| மாத சிவராத்திரி | 17-மார்ச்-2026 செவ்வாய்கிழமை |
| ஏகாதசி | 5-மார்ச்-2026 ஞாயிறு 29-மார்ச்-2026 ஞாயிறு |
| அஷ்டமி | 11-மார்ச்-2026 புதன் 26-மார்ச்-2026 வியாழன் |
| நவமி | 12-மார்ச்-2026 வியாழன் 27-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை |
| அரசு விடுமுறை நாட்கள் | 19-மார்ச்-2026 வியாழன் உகாதி தெலுங்கு வருடப் பிறப்பு 21-மார்ச்-2026 சனிக்கிழமை ரமலான் பண்டிகை 31-மார்ச்-2026 செவ்வாய் மஹாவீர் ஜெயந்தி |
| திருமண நாட்கள் | 05-மார்ச்-2026 வியாழன் தேய்பிறை 06-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை தேய்பிறை 08-மார்ச்-2026 ஞாயிறு தேய்பிறை 15-மார்ச்-2026 ஞாயிறு தேய்பிறை தேய்பிறை 16-மார்ச்-2026 திங்கட்கிழமை தேய்பிறை தேய்பிறை 25-மார்ச்-2026 புதன்கிழமை வளர்பிறை |
| திருவிழாக்கள் | 02-மார்ச்-2026 திங்கட்கிழமை மாசிமகம் 03-மார்ச்-2026 செவ்வாய் ஹோலிப் பண்டிகை 14-மார்ச்-2026 சனிக்கிழமை காரடையான் நோன்பு 19-மார்ச்-2026 வியாழன் உகாதி தெலுங்கு வருடப் பிறப்பு 27-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை ஸ்ரீ ராமநவமி |
இன்றைய ராசி பலன் 01 மார்ச் 2026 ஞாயிறு
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். யாரிடத்திலும் வீண் வம்பு, வாதம் செய்ய வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
ரிஷப ராசி நேயர்களே, ஆன்மீக எண்ணம் மேலோங்கும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
மிதுன ராசி நேயர்களே, எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டிவரும். மன வலிமை கூடும். வதந்திகளை பொருட்படுத்த நம்ப வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். திட்டமிட்ட காரியம் ஒன்று தாமதமாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
சிம்ம ராசி நேயர்களே, எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். மன சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகம் ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்திற்காக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டி வரும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உத்யோகத்தில் ஆதரவுப் பெருகும்.
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். யாருக்கும் வாக்குறுதியும் தர வேண்டாம். தூர பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே, எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
தனுசு ராசி நேயர்களே, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப திறமையாக செயல்படவும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
மகர ராசி நேயர்களே, எதிலும் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படவும். நண்பர்கள் இக்கட்டான நேரத்தில் உதவுவர். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கும்ப ராசி நேயர்களே, உங்கள் செயல் வேகம் கூடும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் பொறுப்புணர்வு அதிகமாகும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிக்க முடியும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 23-02-2026 To 01-03-2026
மேஷ ராசி அன்பர்களே,
இந்த வார பலன்படி, குடும்ப நலனுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். மனதில் துணிச்சல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உடல் நலத்தில் கவனம் தேவை. எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திட்டமிட்டபடி காரியங்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். உத்யோகம் தொடர்பான அலைச்சல் இருக்கும் தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிப்படவும்
ரிஷப ராசி அன்பர்களே,
இந்த வார பலன்படி, எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். மனத்தெம்பு உண்டாகும். வெளியில் யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதிக் குறைவு உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் வரும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் சின்ன மனஸ்தாபம் வரும். புது நபர்களுடன் பழகும் பொது கவனம் தேவை. குடும்பத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் பல முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்.
மிதுன ராசி அன்பர்களே,
இந்த வார பலன்படி, குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர் கூட ஒதுங்கி நிற்பர். வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த ஒரு தொந்தரவும் இருக்காது. நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்பத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உடன்பிறப்புகளிடம் நல்ல ஒற்றுமை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். எந்த முயற்சி மேற்கொண்டாலும் அதை திறமையாக முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்.
கடக ராசி அன்பர்களே,
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதிர்பாராத விவாதமாக புதிய நபர்களை சந்திக்க வேண்டி வரும். மனதில் இருந்த குழப்பங்களும், கவலைகளும் நாளடைவில் சீராகும். சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். தான, தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். உடல் நலம் சீராகும். பிரபலங்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். வீட்டு பாமரிப்பு செலவுகள் கூடும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே உங்கள் எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்.
சிம்ம ராசி அன்பர்களே,
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடைபெறும். ஆன்மிகப் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். வெளி உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். வாக்குவாதங்களையும், அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். நிதானமான செயல்பாடுகளால் காரிய வெற்றி உண்டாகும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். அடிக்கடி செல்லும் பயணங்களால் செலவுகளும், அலைச்சல்களும் ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : ஒரு முறை சூரியனார் கோவில் சென்று வரவும்.
கன்னி ராசி அன்பர்களே,
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களால் மற்றவர்கள் பயனடைவர். திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றி பெரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். எதிர்பார்ப்புக்கு தகுந்தோர் போல் ஒருவர் அறிமுகமாவார். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் சிலர் உதவி கரம் நீட்டுவர். குடும்பத்தில் ஆதரவு பெருகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். மனதில் பல புதிய திட்டங்கள் தோன்றி அதை செயல்படுத்த வழி கிடைக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : வரசித்தி விநாயகரை வணங்கி வழிபடவும்.
துலாம் ராசி அன்பர்களே,
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லவிதமாக நடந்து முடியும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். பெரியோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணவரவு அவ்வப்போது இருக்கும். குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை அதிகரித்தால் மகிழ்ச்சி கூடும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிப்படவும்
விருச்சிக ராசி அன்பர்களே,
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும். மனதில் நினைத்திருந்த விஷயம் கூட எளிதில் முடியும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் நிலவி வந்த இக்கட்டான சூழல் நிலவும். உடன்பிறப்புகளின் நலனில் அக்கறைகொள்ளவும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். பயணங்களால் நன்மை உண்டாகும். கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும். பெரியோர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிப்படவும்
தனுசு ராசி அன்பர்களே,
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல அரிதான விஷயங்கள் நடக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். வரும் எதிர்ப்புகளை கூட தைரியமாக சமாளிக்க முடியும். குடும்ப நபர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்னை உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வாகனங்களில் செல்லும்போது பொறுமை அவசியம். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்.
மகர ராசி அன்பர்களே,
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் பேச்சு திறமையால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். பொருளாதார வளம் மேம்படும். மனதில் இருந்த கவலை நீங்கும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாகப் பழகுவது அவசியம். குடும்பத்தில் வரும் பிரச்சனைகள் நாளடைவில் சீராகும். உடனிருப்பவர்களுடன் கவனமாகப் பழகவும். பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். உங்களது பல செயல்கள் காரணமாக சமூகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். குடும்ப மருத்துவரிடம் உடல் நலத்தை பரிசோதித்து கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலமும் நிலவும். உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் 9 முறை வலம் வரவும்.
கும்பம் ராசி அன்பர்களே,
கும்ப ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியதிருக்கும். பொருளாதார வளம் கூடும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். நேர்மையான எண்ணங்களும், சிந்தனைகளும் உங்களை பெரியளவில் உயர்த்தும். நண்பர்கள் ஆதரவு வழக்கம் போல் இருக்கும். மனசங்கடம் வராமல் தடுக்க தினமும் தியானம் செய்யவும். பெரியோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். உறவினர்களால் சில உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குல தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. குடும்பத்தில் பொறுமையுடனும் கவனமுடனும் செயல்பட்டால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கி வழிபடவும்.
மீன ராசி அன்பர்களே,
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை செயல்படுத்த முடியும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எப்போதும் இல்லாத சந்தோஷம் ஏற்படும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். புது நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உறவினர்களிடம் இருந்த பகைமை நிலை நீங்கும். கணவன் மனைவிடையே நெருக்கம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெரியோர்களிடம் உங்கள் குறைகளை சொல்லவும். குடும்பத்தில் எதிர்பாராத பல செலவுகள் வரும். உத்யோகத்தில் ஆதரவுப் பெருகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்.
மார்ச் மாத ராசி பலன்கள் 2026
| மார்ச் மாத ராசி பலன்கள் 2026 |
| (2026) – மார்ச் மாத ராசி பலன்கள் விசுவாவசு வருடம் மாசி மாதம் 17ம் தேதி முதல் பங்குனி மாதம் 17ம் தேதி வரை (01-03-2026 – 31-03-2026) வாக்கிய பஞ்சாங்கப்படி 01-03-2026 முதல் 31-03-2026 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் திசை, புத்தி, அந்தரம் மற்றும் கோச்சாரம் கணக்கிட்டு பார்க்கும் போது ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும், இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை. மார்ச் மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு : 06.03.2026- மீன சனி 15.03.2026 – மீன சூரியன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் A.வினோத் குமார் (Ph.d Astrology) |
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் உண்டு. நீண்ட நாள் எண்ணங்கள், திட்டங்கள் நிறைவேறும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். மன சங்கடங்கள் நாளடைவில் தீரும். பல முக்கிய சவால்களையும், விவாதங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எப்போதும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவைகள் பூர்த்தியாகும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர்களிடம் சின்ன சின்ன சின்ன மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரிய செலவுகள் அதிமாகும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது எல்லா வகையிலும் சிறப்பு. உடல் உபாதைகள் நீங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். அடிக்கடி பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிரபலங்களின் அறிமுகவும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். புது முயற்சிகளை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் தொடங்க முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 9,10,11 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு வெகுவாக உயரும். இனிமையான பேச்சின் மூலம் பலரது ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதாமல் வெளியில் கைமாற்ற பணம் வாங்க வேண்டியிருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் கூட சீக்கிரத்தில் முடிவடையும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். குடுமபத்தில் புது நபர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோசனையை சற்று தள்ளி வைப்பது நல்லது. பெற்றோர்களின் ஆலோசனைகள் உதவியாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் ஏற்படும். பல நாட்களாக திட்டமிட்டு இருந்த தெய்வ வழிபாட்டை தவறாமல் மேற்கொள்ளவும். உடல் நலத்தை பொறுத்தவரை எந்த தொந்தரவும் இருக்காது. உங்கள் முக்கிய காரியங்கள் நாளடைவில் நிறைவேறும். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 11,12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் வரும் இன்னல்களை சமாளிக்க முடியும். எதிர்பார்க்கும் காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். மனம் மகிழ்ச்சியில் துள்ளும். போதிய வருமானம் தங்கு தடையின்றி கிடைக்கும். உங்களது அன்றாட பணிகளை காலம் தாழ்த்தாமல் செய்யவும். மனம் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். தெய்வ காரியங்களில் நாட்டம் உண்டாகும். குடும்பத்தினருடன் சென்று பிராத்தனையை செய்யவும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வேண்டியவர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்த சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப வர தாமதமாகும். வெளியில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிரியமானவர்கள் வழியில் சில அனுகூலமான பலன் உண்டு. நண்பர்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகவும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். .
சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே,
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் பல வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சிரமம் இன்றி சமாளிக்க முடியும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தன்னம்பிக்கையும், மன தைரியம் அதிகரிக்கும். குடும்ப சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. புது நண்பர்கள் அறிமுகமாவர். உற்றார், உறவினர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் வர வாய்ப்புண்டு. புதிய வண்டி, வாகனங்களை வாங்க முடியும். குடும்ப நபர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். கிடைக்க வேண்டிய நல்லது அனைத்தும் ஒவ்வொன்றாக கிடைக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். பல நாட்களாக தடைபட்ட திருமணம் விரைவில் கைகூடும். கடன் சுமைகள் பாதியாக குறையும். உடன்பிறப்பு வகையில் ஆதரவும் கூடும். உங்கள் அன்றாட வரவு செலவு கணக்குகளை தினசரி சரி பார்க்கவும். வெளிநாடு செல்லாதவர்க்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். அடிக்கடி பயணங்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 18,19,20,21 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, உங்கள் விருப்பங்களை எதுவாகினும் அது நிறைவேற்ற வழி கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மை உண்டாகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நிறைய சந்தர்ப்பங்கள் வரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். திருமண காரியம் கைகூடும். கடன் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருப்பதால் அனாவசிய செலவுகளை அறவே தவிர்க்கவும். தூரத்து பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் : 21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாக்கு சாதுரியம் ஏற்படும். மனக்கவலைகள் அடியோடு மறையும். குடும்பத்தில் முக்கிய விசேஷங்கள் நடக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க பழகவும். தெய்வ வழிபாட்டின் மூலம் பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும்.வாகன யோகம் உண்டு. நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நண்பர்கள் கேட்ட உதவியை செய்து தருவர். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வேண்டாதவர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எடுத்த வேலைகளை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். உத்தியோகத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ, செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயனடைவர். எல்லா விஷயத்திலும் பொறுமையை கடை பிடிக்க வேண்டியது அவசியம். மனதில் ஒரு விதமான குழப்பங்கள் நிலவினாலும் அது நாளடைவில் சரியாகிவிடும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. புது வீடு மாற்றம் ஏற்படும். வெளியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும். பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிட்டும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்துடன் தூர பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பயணங்கள் தொடர்பாக அலைச்சல், செலவுகள் ஏற்பட்டாலும் மனத்திருப்தி கொள்ளும் வகையில் நற்பலன் உண்டாகும். புது நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் கிட்டும். பெண்கள் வகையில் சில நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகள் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிலும் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து வந்தால் உடல் மேன்மை பெரும். வரும் வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்தி கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். பண வரவு வெளியில் சொல்லும்படி இருக்கும். உங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலகி விடும். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். அடுத்தவர் செய்ய தயங்கும் காரியத்தை கூட தைரியமாக செய்ய முடியும். மற்றவர்களை கவரும் திறமை உங்களிடம் நிறைவே இருக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவும். ஆன்மீக ஆர்வம் கூடும். கொடுக்கல் வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். புதிதாக ஏதேனும் செய்ய விரும்பினால் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 27,28,29 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மிகுதியாக இருக்கும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எப்போதும் நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். வீட்டில் அனாவசிய செலவுகளை குறைக்கவும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு நல்ல விதமாக இருக்கும். உங்கள் வித்தியாசமான அணுகுமுறையாலும் சாதுரியமான பேச்சாலும் எதையும் சாதிக்க முடியும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெருக்கிகொள்ள முடியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். கடன் பிரச்சனைகள் அவ்வபோது தலைதூக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். வாகன யோகம் உண்டு. எப்போதும் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
சந்திராஷ்டமம் : 2,3,4 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். மனம் நிம்மதிக்காக தினமும் தியானம் செய்யவும். இழுபறியில் இருந்த வேலைகளை சீக்கிரத்தில் முடிக்க முடியும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத அளவிற்கு செலவுகள் வரும். மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். முடிந்தவரை அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் தரப்படும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் குதூகலமும் இருக்கும். திருமணம் காரியம் கைகூடும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலர் பூர்விக இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். வாகனங்களில் செல்லும் போது தொலைபேசியை உபயோகிக்க வேண்டாம். கணவன் மனைவிடையே இணக்கமான போக்கும் காணப்படும். நண்பர்களிடம் உங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளவும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். குடும்ப நபர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 4,5,6 & 31 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீண்ட காலமாக திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செய்யவும். எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். சேமிப்பில் கவனம் செலுத்தினால் பல வகையில் நன்மை அடையலாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். புது வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டு. குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் நற்செய்தி உண்டு. கொடுக்கல் வாங்கலில் சில சிரமங்கள் இருக்கும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். உத்யோகத்தில்அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 6,7,8,9 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.