தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 17வது நாளாக தொடரும் ஈருருளிப் பயணம் சுவிஸ் நாட்டில் தொடர்கிறது.

மனித நேய ஈருருளிப்பயணத்தின் 17வது நாளான இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் தொடர்கிறது.

இன்று 28/02/2026 காலை அகவணக்கத்துடன் சுவிஸ் பெர்ண் நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.

தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சற்றும் தளராது பயணித்து இன்று மாலை சுவிஸ் லவுசான் நகரில் நிறைவுபெற்றது.

தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு நாளை காலை ஜெனிவா மாநகரை நோக்கி பயணிக்கும்.

“நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.”

-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.