திமுக வழங்கிய 25 இடங்களை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார்.

Congress senior in-charge Girish Chodankar

திமுக கூட்டணியில் பிப்.22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. அதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.

ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என்று மல்லுக்கட்டும் காங்கிரஸ், திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை தொடங்கியது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந் நிலையில், புதுடில்லியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; எங்கள் குழுவினரும், திமுகவின் பேச்சுவார்த்தை குழுவினரும் நேற்று 1 மணி நேரம் விவாதித்தனர். நாங்கள் சமர்ப்பித்த விருப்பப் பட்டியலை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம்.

தற்போது, ​​எங்களின் கவனம் எல்லாம் சட்டமன்றத் தேர்தலை நோக்கி உள்ளது. சட்டமன்றத்தில் போதிய எண்ணிக்கையில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறோம். அவர்கள் (திமுக) முடிவு செய்த 25 தொகுதிகளை எங்களுக்கு அளிக்க முன் வந்தனர். அதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்களின் விருப்பம் என்ன என்பதை அவர்களிடம் தந்துள்ளோம்.

தவெக ஒரு புதிய கட்சி. அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. இளைஞர்களின் ஈர்ப்பு அந்த கட்சிக்கு இருக்கிறது. மேலும் அவர்கள் எங்கள் பலத்தையும், ராகுல் பலத்தையும் அறிந்தவர்கள் என்றார். அவரிடம் தவெகவுடன் கூட்டணி என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கிரிஷ் சோடங்கர், இப்போது திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த தேர்தலில் எங்களின் விருப்பம் என்ன என்பதை அவர்களிடம் நாங்கள் வழங்கி இருக்கிறோம் என்றார்.

Related posts

முத்துராமலிங்க தேவர் மணிமண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது; நைனார் கண்டித்துள்ளார்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்: வோல்கர் டேர்க்

இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக இழுவைப் படகுகள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது!