இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்கும்.

ஈரான் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ள போதிலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் வரத்தில் உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், விலை உயர்வு மற்றும் பொருளாதார ரீதியான தாக்கங்கள் ஏற்படக்கூடும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் தெரிவித்ததாவது: இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிடம் அடுத்த 10 முதல் 15 நாள்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. மேலும், 5 முதல் 7 நாட்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பும் முழுமையாக உள்ளது. இந்த கையிருப்பு, குறுகிய கால இறக்குமதி தடையை எளிதாக சமாளிக்க உதவும்.

வரத்து தடைபடும் பட்சத்தில், ரஷ்யா, அமெரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான மாற்று திட்டங்களும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு தெரிவித்தன.

ஹார்முஸ் ஜலசந்தி


* இந்தியாவின் 50 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.

* கிட்டத்தட்ட 60 சதவீத இயற்கை எரிவாயு மற்றும் 100 சதவீத சமையல் எரிவாயு இறக்குமதியும் இந்த கடல் வழியை சார்ந்தே உள்ளன

* இந்த கடல் வழி நீண்ட காலத்துக்கு மூடப்பட்டால் மட்டுமே, மாற்று வழிகள் குறைவாக உள்ளதால், எரிவாயு வினியோகத்தில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

பொருளாதார தாக்கம்:

* வினியோகத்தில் பெரும் தட்டுப்பாடு இல்லை என்றாலும், விலை உயர்வே தற்போதைய முக்கிய சவாலாக உள்ளது.

* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அது, இந்தியாவின் இறக்குமதி செலவை நேரடியாக அதிகரிக்கும்.

* இதனால், நாட்டின் பணவீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றில் அழுத்தம் ஏற்படும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related posts

தேசிய வானிலை அறிக்கை – இந்தியா

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஈரானின் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் ஜியா பிரிவு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.