வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியில், 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தற்போது, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, வரும், 6ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும், 4ம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும், 7ம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். – இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.