அதற்கமைய, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இலங்கை தூதரகம் நேரடித் தொடர்புகளைப் பேணி வருகின்றது.
தற்போது சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பதாகத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
அவசர தேவைகளுக்காக இலங்கையர்களுக்கு உதவி வழங்க விசேட சேவைப் பிரிவு ஒன்று தூதரகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொதுமக்களுக்கான சில அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, உத்தியோகபூர்வ தகவல்கள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு இடங்கள் மற்றும் விமான நிலைய அணுகல் தொடர்பான புதிய அறிவுறுத்தல்கள் இலங்கை தூதரகம் மற்றும் துபாய் கொன்சியூலர் அலுவலகத்தின் Facebook பக்கங்களில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். எனவே, சமூக வலைத்தளங்களின் ஊடாக அவற்றைத் தொடர்ச்சியாக அவதானிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
எவரேனும் தற்போது சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டிருந்தால், தத்தமது விமான சேவை நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா முகவர்களுடன் தொடர்பைப் பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் செய்திகளை மாத்திரம் நம்புமாறும், இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தூதுவர் அருஷா குரே மேலும் தெரிவித்துள்ளார்.
