Table of Contents
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் கமேனி கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் மொஜ்தபா ஈரானின் புதிய ஆட்சியாளராகவும் மதத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆட்சியாளரும், மதகுருவுமான கமேனி கொல்லப்பட்டார். டிரம்ப் கூறியபடி கமேனியை கொன்று விட்டாலும், ஈரான் மீதான தாக்குதல் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று அமெரிக்கா அறிவித்தது. ஈரானின் இடைக்கால ஆட்சியாளராக அயதுல்லா அலிரேசா அராபி நியமிக்கப்பட்டார்.
ஈரானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, புதிய தலைவர் தேர்வு செய்யும் வரை, இவரது தலைமையிலான கவுன்சில், நாட்டை வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அயதுல்லா கமேனியின் மகன் மொஜ்தபா ஈரான் புதிய ஆட்சியாளர் மற்றும் மத குருவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
