கமேனி மகன் மொஜ்தபா ஈரானின் புதிய ஆட்சியாளராகவும் மதத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மொஜ்தபா ஈரானின் புதிய ஆட்சியாளராகவும் மதத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆட்சியாளரும், மதகுருவுமான கமேனி கொல்லப்பட்டார். டிரம்ப் கூறியபடி கமேனியை கொன்று விட்டாலும், ஈரான் மீதான தாக்குதல் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று அமெரிக்கா அறிவித்தது. ஈரானின் இடைக்கால ஆட்சியாளராக அயதுல்லா அலிரேசா அராபி நியமிக்கப்பட்டார்.

ஈரானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, புதிய தலைவர் தேர்வு செய்யும் வரை, இவரது தலைமையிலான கவுன்சில், நாட்டை வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அயதுல்லா கமேனியின் மகன் மொஜ்தபா ஈரான் புதிய ஆட்சியாளர் மற்றும் மத குருவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த மொஜ்தபா?

* 1969ம் ஆண்டு மஷாத் நகரில் மொஜ்தபா பிறந்தார். இவர் ஒருபோதும் பதவி வகித்ததில்லை, ஆட்சியில் எந்த முறையான பதவியும் வகிக்கவில்லை. இருப்பினும் அவர் பின்னால் இருந்து செல்வாக்கை செலுத்தி வந்திருக்கிறார்.

* ஈரான்-ஈராக் போரின் போது அவர் ஈரான் ஆயுதப் படையுடன் இணைந்து மொஜ்தபா போராடினார். மறைந்த ஆட்சியாளர் அயதுல்லா கமேனியின் மனைவி, மகள், பேரக்குழந்தை, மருமகள் மற்றும் மருமகன் கொல்லப்பட்ட நிலையில், உயிர் பிழைத்த கமேனி குடும்ப உறுப்பினர்களில் மொஜ்தபாவும் ஒருவர்.

* 2019ம் ஆண்டில் அமெரிக்க கருவூலத் துறை மொஜ்தபா மீது தடைகளை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்கப் பிராந்திய இராணுவம்: ஆயிரக்கணக்கான படைகள் ஏன் களமிறக்கப்படுகின்றன?

குவைத் வான் பாதுகாப்பு தவறுதலாக “மூன்று அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது.”