அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இளஞ்சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு “மகளிர் தின” வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

by
0 comments

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், அ.தி.மு.க., சார்பில், ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ பிரசார கூட்டம் நேற்று மாலை நடந்தது.

இன்னும், எட்டு நாளில் தேர்தல் அறிவிப்பும், அடுத்த மாதம் தேர்தலும் வந்துவிடும். தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ‘அ.தி.மு.க.,வை, பா.ஜ., விழுங்கிவிடும்; அ.தி.மு.க.,வையே அழித்துவிடும்’ என்கிறார். அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

அதே கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ‘அ.தி.மு.க.,வில் எங்களுக்கு மரியாதை இல்லை’ என குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நேரத்தில் தி.மு.க.,வின் ‘பி’ டீம் என நாங்கள் கூறி வந்த பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளித்தார்.

தற்போது, தி.மு.க., பக்கம் சென்று, தன்னை ‘பி’ டீம் என நிரூபித்துள்ளார். ‘கெடுவான் கேடு நினைப்பான்; அவனும் கெடுவான்’ என்பதற்கு ஏற்ப பன்னீர்செல்வம், ஸ்டாலினுடன் இணைந்துள்ளார்.

அ.தி.மு.க.,வுக்கு துரோகம் இழைத்ததால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மாக்கள் அவரை அ.தி.மு.க.,வில் இருந்து விரட்டி அடித்துள்ளன.

அதனால், அ.தி.மு.க., இன்று துாய்மையான இயக்கமாகி உள்ளது. ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்பர். அதேபோல பன்னீர்செல்வம் புகுந்த தி.மு.க.,வும் உருப்படாது.

அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டனும், முதல்வர் உட்பட எந்த பதவியையும் பெற முடியும். தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பதவிகளை பெற முடியும். கருணாநிதி உயிரோடு இருந்த வரை, ஸ்டாலினை அவர் நம்பவில்லை.

கட்சி தலைமை, முதல்வர் பதவி என எதையும் ஸ்டாலினுக்கு தரவில்லை. செயல் தலைவர், துணை முதல்வர் என்றே பதவிகளை வழங்கினார். கருணாநிதியே நம்பாத ஒரு நபர் தான் ஸ்டாலின். இதை உலகம் அறியும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00