த.வெ.க., சார்பில் சென்னையில் நேற்று நடந்த மகளிர் தினவிழாவில் அவர் பேசியதாவது: விஜய், வட சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார். வில்லிவாக்கம் அல்லது பெரம்பூர் தொகுதியில் நிற்க வாய்ப்புள்ளது.
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒருவரும் சாலையில் நடக்க முடியாது. சிறுமி முதல் பார்க்கும் பெண்களை எல்லாம், தி.மு.க.,வினர் கையை பிடித்து இழுக்கின்றனர். இப்படிப்பட்ட கட்சியை உருவாக்கி விட்டு, முதல்வர் ஸ்டாலின் தினமும் கண்மூடி செல்கிறார்.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கையெழுத்திட்டதும் தைரியம் வந்துவிட்டது போல் இருக்கின்றனர். அது மதசார்பற்ற கூட்டணி இல்லை; கல்லாப்பெட்டி கூட்டணி.
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தால், நல்ல கட்சியாக இருக்கும். ஆளும் கட்சியாக வந்து விட்டால், கண்ணில் பார்ப்பதை எல்லாம் அடைய வேண்டும் என நினைக்கும். மத்திய அரசு விதிப்பது ஜி.எஸ்.டி., என்றால், தமிழகத்தில் ஸ்டாலின் சார் ‘டேக்ஸ்’, அதாவது எஸ்.எஸ்.டி.,
- திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
- கூட்டணியில் 10 இடங்களுக்கும் குறைவாகக் கிடைத்தால் நாங்கள் ராஜினாமா செய்வோம் – தே.மு.தி.க
- வன்கொடுமை வழக்கு: காஞ்சி டிஎஸ்பி கைது, நீதிபதி அவரை காரில் சிறைக்கு அழைத்துச் சென்றதால் சர்ச்சை!
- ‘தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்’ என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- காசாவுக்காக கண்ணீர் வடிக்கும் திராவிட மாடல் 2.0 மானுட பற்றாளர்கள் வாழ்க! வாழ்க!
- திமுக அமைச்சர் நேரு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
தேர்தல் அறிவிப்புக்கு பின், விஜய் தெருத்தெருவாக செல்லும்போது, மக்களின் எழுச்சியை பார்க்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.